இர்ஃபான் தனது பயணத்தை கனா காணும் காலங்கள் என்ற விஜய் டிவி தொடரில் தொடங்கினார். அங்கு வினீத் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், இளைஞர்களிடையே விரைவில் பிரபலமானார்.
பின்னர் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, பட்டாளம், சுண்டாட்டம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய புகழைத் தந்தது சரவணன் மீனாட்சி தொடரே. அங்கு சக்தி சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பின்னர், இர்ஃபான் இயக்கத்திலும், எழுத்திலும் முயற்சி செய்தார். நிதின் சத்தியா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்தார், ஆனால் அது நிறைவேறவில்லை. இதனால், அவரது சினிமா பயணம் எதிர்பார்த்தபடி முன்னேறவில்லை. தொலைக்காட்சியிலும் அவர் மெதுவாக மறைந்தார். புதிய நடிகர்கள் முன்னிலைக்கு வந்ததால், அவர் பெற்ற புகழ் குறைந்தது.
இன்று, இர்ஃபான் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த கதாபாத்திரத்தால் நினைவுகூரப்படுகிறார். அவரது வாழ்க்கை, தமிழ் பொழுதுபோக்கு உலகில் புகழை நிலைநிறுத்துவது எவ்வளவு கடினம் என்பதை காட்டுகிறது
பொங்கி எழு மனோகரா , அகம் , ராஜாவுக்கு செக் போன்ற வெற்றியை பெறவில்லை, கேரியரில் மாற்றத்தை எதிர்பார்த்த நமது ஹீரோ இப்போது கனா காணும் காலங்கள் 2022 ரீபூட் தொடரில் ஒரு கெஸ்ட் அப்யரன்ஸ் கொடுத்தாலும் புதிய ப்ராஜெக்ட்கள் இவருக்கு கிடைக்க வலைப்பூ சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம் !
1 கருத்து:
சரவணன் மீனாட்சி சீஸன் 2 நினைவுகள் , பேவரட் கேரக்டர் ❣️
கருத்துரையிடுக