ஸ்ட்ரீமிங் யுகத்திற்கு முன்னால், இசையை நாம் கேட்கும், பகிரும் முறைகளை மாற்றியமைத்த அதிசய கண்டுபிடிப்பாக இருந்தது என்ன தெரியுமா ? ஆடியோ கேஸெட்டு பிளேயர்ஸ். 80-கள் கேஸெட்டுகளின் பெரும் வெற்றிக்காலம். உலகெங்கும் இசை கேட்கும் பிரதான சாதனமாக மாறியது, குறிப்பாக மிக்ஸ் டேப்புகள் தனிப்பட்ட விருப்பப்படி பாடல்களை தொகுத்து ரெக்கார்ட் செய்து பரிமாறும் கலாசாரம். பெரிய டேப் பிளேயர்கள் தெருவிலும், சுற்றுலா பயணத்திலும் இசையை கேட்கும் ஸ்டைலான சாதனம் என்று மாறியது. கார் கேஸெட்டுகள் பற்றி சொல்லவா வேண்டும் ? கார்களில் கேஸெட்டு பிளேயர்கள் வழக்கமானதாகிவிட்டது. இந்தியாவில் கூட பாடல்களை கேஸெட்டுகள் மூலமாக மக்கள் பரவலாக அனுபவித்தனர். இசை கடைகள், வாடகை சிஸ்டம் பரவலாக இருந்தது. ஸிடி-க்கள் அறிமுகமானாலும், கேஸெட்டுகள் இன்னும் பல வருடங்கள் தலைமையேற்கின்றன. இந்த போரை முடிவுக்கு கொண்டுவந்த புரட்சி மலிவான டிவிடி , விசிடி பிளேயர்கள் மற்றும் கம்ப்யூட்டர் கன்வேர்ஷன். நிறைய பேர் பாடல்களை டிவிடி டெக்கில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள், பாட்டு கேஸட்கள் டிவிடி கேஸட்டுகளாக மாறியது இந்த காலம்தான் 2002 - கள் ! பென் டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க் வந்ததில் இருந்து மொத்தமாக கேஸட்டுகள் அழிந்துவிட்டன ! ஒரு சாதாரண டேப் கம்பியின் சுழற்சியால் நம் இசை அனுபவம் 40 ஆண்டுகள் தலைமுறைகளை கடந்தது. இன்று ஸ்ட்ரீமிங் வசதிகள் இருக்கும் போதிலும், ஒரு கேஸெட்டின் வாசனை, அதன் பக்கத்தில் பெயர்களை எழுதிய பேப்பர் லேபிள், மற்றும் ரேவைன்ட் பண்ணும் சத்தம் எல்லாமே சிறப்பான நினைவுகள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
CLEAR TALKZ - EPISODE 7
பிறப்பு அடிப்படையிலான பிரிவினை, பாகுபாடு போன்றவற்றை பார்க்காமல், ஒருவருக்கு திறமை இருந்தால் அவர் முன்னேறி விடுவார்; திறமை இல்லாவிட்டால் மு...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...
-
அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக