திங்கள், 4 ஆகஸ்ட், 2025

NEVER STOP ARTICLE WRITING - TAMIL [TAMILNSA] - EPISODE -#0003

 


இன்றைக்கு காலையில் ஒரு பிரமாதமான கனவு. என்ன கனவு என்றால் திருநெல்வேலிக்கு பஸ்சில் சென்று சொந்தக்காரர்களை பார்த்து அங்கே இருக்கும் நம்ம சொந்தக்காரங்களோடு பேசி சந்தோஷமாக அந்த நாளை செலிபரேட் செய்துவிட்டு ஈவினிங் பஸ் ஏறி புறப்பட்டு சொந்த ஊருக்கு வருவது போல ஒரு கனவு.ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் திருநெல்வேலியில் எனக்கு சொந்தக்காரர்களை இல்லையே.

பெரும்பாலான நேரங்களில் வேலை செய்பவர்களை அவர்களுடைய வேலையை செய்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட வேண்டும். நாமாக குறுக்கே சென்று இந்த வேலையே இப்படி செய்ய வேண்டும். அந்த வேலையை அப்படி செய்ய வேண்டும் என்று அட்வைஸ் ஆக கொடுத்து அவருடைய கைகளை கட்டிப்போட்டு வைக்க கூடாது.

ஒரு வாகனத்தை ஓட்டும் போது யாராவது ஒருவர் மட்டும் தான் ஓட்ட வேண்டும். இருவர் சேர்ந்து ஓட்டினால் ஒருவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொருத் திசையை கொண்டு செல்ல வேண்டும் என்று வாகனத்தை திருப்பத் திருப்ப வாகனத்தின் பழுது தான் அதிகமாகும். நிறைய 

நேரங்களில் விபத்து கூட ஏற்படலாம். இதனை நான் எதற்கு சொல்கிறேன் என்றால், இந்த காலத்தில் ஒருவரை அவர்களுடைய வேலையை செய்ய விடாமல் தடுத்து இந்த வேலையை இப்படி செய்ய வேண்டும். இந்த வேலையில் ஒரு பெரும் பிரச்சனை கொண்டு வர வேண்டும் என்று ஒரு சில நேரங்களில் நிறைய பேர் நினைப்பதெல்லாம் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் ஒரு வேலையை ஒரு மாதிரியாக செய்து கொண்டு இருந்தால் அந்த வேலை ஸ்லோவாக இருந்தாலும் சரியானதாக இருக்கும். அவர்களால் செய்ய முடிந்த கேபாசிட்டிக்குத் தகுந்ததாக இருக்கும். அவருடைய கேபாசிட்டியை மீறி அதிகமாக வேலை செய்ய வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை கொடுப்பது கடைசியில் சோகத்தில்தான் முடியும்

1 கருத்து:

Rocket Raja சொன்னது…

சமீபத்தில் என்னுடைய நண்பர் என்னுடைய லேப்டாப்பை போட்டு உடைப்பதை போல ஒரு கனவு கண்டேன், உடைத்துவிட்டு மன்னிப்பு வேறு கேட்டார், நல்லவேளை கனவாக போய்விட்டது

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...