ஒரு சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை நாம் கிடைத்த காஸ்ட்லியான லேசன் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். குறிப்பாக, நாம் மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ அனுபவித்தாலும், அவற்றை வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் பாடங்களாகக் கருத வேண்டும். உண்மையில், இந்த அனுபவங்களுக்காக நாம் நிச்சயமாக நிறைய பணம் செலவழித்திருப்போம். அந்த வகையில், இவற்றை விலை உயர்ந்த பாடங்களாக நீங்கள் கருதலாம். நம்முடைய வாழ்க்கையில் மிகவும் அதிகமாக நம்பியவர்கள் நம்முடைய கண்களுக்கு நல்லவராக தெரிந்தவர்கள் மட்டும் தான் நம்மை ஏமாற்றுகிறார்கள் இந்த ஏமாற்றங்களைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தனிமையைக் கடக்க விரும்பினால், உங்களுக்கென ஒரு பெரும் சக்தியை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். நான் பேசுவது பொருளாதார வலிமையைப் பற்றி. உண்மை என்னவென்றால், நீங்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறும்போதுதான், மற்ற பொருளாதார மனப்பான்மை கொண்டவர்கள் உங்களை மதிப்பார்கள். உங்கள் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தானே? நாம் பலருடன் பேசுகிறோம், பழகுகிறோம், அவர்கள் அனைவரும் ஒரே விஷயத்தைச் சொல்கிறார்கள்: வாழ்க்கையில் பணம் மட்டுமே நம்மைக் காப்பாற்றும். வாழ்க்கையில் வேறொருவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று நாம் நினைத்தால், இறுதியில் நாம்தான் சிக்கலில் மாட்டிக்கொள்வோம். பொறாமை என்பது நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் இருவரிடமும் காணப்படும் ஒரு குணம். பொறாமை குணம் கொண்டவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், நல்லவர்கள்கூட இந்தப் பொறாமை என்ற எதிர்மறை குணத்தை ஒரு கிரீடம் போலச் சூடிக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக