வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

NEVER STOP ARTICLE WRITING - TAMIL [TAMILNSA] - EPISODE -#0001






ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கக்கூடிய விஷயங்கள் அனைத்துமே பதிவு செய்வது என்பது எப்பொழுதுமே முக்கியமானது. இந்த காலத்துல என்னென்ன விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது என்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலுமே இந்த விஷயங்களைப் பற்றிய டெக்ஸ்ட்டாக அதிகம் பேர் நிறைய பதிவு பண்ணதே இல்லை. அதனால தான் இந்த வலைப்பூவில் இந்த புதிய பகுதி. "இன்று கொஞ்சம் தகவல்" இந்த பகுதியின் மூலமாக இந்த காலத்து மக்களுடைய யோசனைகள் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை பற்றியும் இன்னும் நிறைய தகவல்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிறைய வாக்குவாதங்கள் போன்ற விஷயங்களை. இந்த பதிவுகளில் நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். ஒரு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தினால், நிறைய கட்டுரைகளை எழுதி கொடுக்கும். ஆனால் இந்த வலைப்பூவின் சிறப்பு என்னவென்றால், இந்த வலைப்பூ எப்போதும் ஒரு நபரின் தனிப்பட்ட கருத்தாகவே இருந்து வருகிறது. இப்போதெல்லாம் நாம் நிறைய தகவல்களை அறிந்திருக்கிறோம், ஆனால் இந்தத் தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதா இல்லையா என்பதை நம்மால் பகுத்தறிய முடியவில்லை. இந்தப் பதிவுகளில் உள்ள தகவல்கள் யாருக்கும் பயனுள்ளதாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்தப் பதிவு தொடர்பில்லாத தகவல்களின் தொகுப்பு மட்டுமே என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ! இந்த வலைப்பூ என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இந்த வலைப்பூ உடைய நோக்கம். நெவர் ஸ்டாப் ஆர்டிகல் ரைட்டிங் என்பதுதான். AI - வந்தாலும் பின்னுக்கு செல்லமாட்டான். இந்த சுமாரான எழுத்தாளன். இந்த வலைப்பதிவைப் பார்வையிட்டு கட்டுரைகளைப் படித்ததற்கு நன்றி. சந்தா பொத்தானைக் கிளிக் செய்யவோ அல்லது எங்களைப் பின்தொடரவோ மறக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:

நெருப்பு பறக்கணும் மக்களே !!

  வாழ்க்கையில் கடன் நிறைய வந்துவிட்ட நேரங்களில் அனுபவம் இல்லாமல் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை ஆரம்பிப்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கும்...