அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்
கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே
ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே
அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே
நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே
1 கருத்து:
காதல் தோல்வி 💔💔💔
கருத்துரையிடுக