ஜெம்ஸ் மாதிரியான மிட்டாய்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன?
ஜெம்ஸ் சிறிய, வண்ணமயமான சர்க்கரை இனிப்பு சேர்க்கப்பட்ட சாக்லேட் உருண்டைகள். இவை சாக்லேட்டின் மென்மையும், மேல்தோலின் கெட்டியும் சேர்ந்து சுவையான ஸ்னாக்ஸ் ஆக மாறுகின்றன. இவை தயாரிக்கப்படும் முறைகள் அறிவியல், சுவை மற்றும் கலை என்று நிறைய விஷயம் சேர்ந்தது ஒவ்வொரு ஜெம்ஸின் உள்ளே இருக்கும் சாக்லேட் பகுதி மட்டுமே சிறிய உருண்டையாக உருவாக்கப்படுகிறது. முதலில், கோகோ பவுடர், பால் பவுடர், சர்க்கரை மற்றும் கோகோ பட்டர் சேர்த்து உருக்கப்படுகின்றன. இது பின்னர் மென்மையாகவும் சுவையாகவும் மாற்றப்படுகிறது. பிறகு, இது குளிரவைத்து சிறிய உருண்டைகளாக வடிவமைக்கப்படுகிறது ஜெம்ஸின் ஷெல் பகுதி சர்க்கரை சிரப்பில் உணவுக்காக ஏற்ற வண்ணங்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த சிரப்பு எனப்படும் உருளும் டிரம்மில் சாக்லேட் உருண்டைகளுக்கு மேற்பூச்சு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மிட்டாய்களுக்கும் பண்ணி, உலர்த்தி, அடுத்த கலர்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் மென்மையான டிஸைன் கிடைக்கும் முடிவில், உணவு மெழுகு சேர்த்து ஜெம்ஸ்கள் பளபளப்பாகவும் ஒட்டிக்கொள்ளா மிட்டாய்யாகவும் மாற்றப்படுகின்றன. பின்னால் ஒவ்வொரு மிட்டாய்களும் தரம் , சுவை ஆகியவற்றுக்காக சோதனை செய்யப்படுகிறது. பிறகு, இயந்திரங்கள் பேக் பண்ணுகின்றன. பேக்கிங் வெப்பம் மற்றும் ஈரத்திலிருந்து பாதுகாக்கிறது.
1 கருத்து:
தோ பார்றா ! டிஸ்கவரி சேனல் கன்டன்டு
கருத்துரையிடுக