ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே
வெள்ளி மலைக் கோலங்களை அள்ளி கொண்ட மேகங்களை
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே
கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ
கட்டி கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட தாளங்கள் போட
வானெங்கும் போகதோ ஆனந்த ராகம் கேட்கும் காலம்
வண்ண வண்ண எண்ணங்களும் வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம் ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
1 கருத்து:
காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்றதுக்கு கஷ்டப்படுறவங்க மத்தியில, காதலிச்ச பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கஷ்டப்படுறவங்கள பார்த்திருக்கீங்களா?
'பூவே உனக்காக' ❣️
ரொம்ப சின்சியரா ஒன் சைட் லவ் பண்ணி, அந்த பொண்ணு கிட்ட லவ்வை சொல்லப் போறப்போ, அந்த பொண்ணு அவளோட லவ்வை இவர்கிட்ட சொன்னதும் அங்கேயே லவ்வை முடிச்சு புதைச்சுருவாரு..!!
அந்த பொண்ணுதான் உன்னை லவ் பண்ணலன்னு சொல்லிட்டல்ல, அப்புறம் எதுக்கு அவளுக்கு ஹெல்ப் பண்ண போறன்னு பிரண்ட்ஸ் எல்லாம் கேக்குறப்போ, 'அவளை கல்யாணம் பண்ணிட்டு நான் சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சேன், அது நடக்காம போயிடுச்சு. அவளாவது அவளுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கட்டும்'னு சொல்லிட்டு, ரெண்டு பிரிஞ்ச ஃபேமிலியையும் ஒன்னு சேர்க்க கிளம்பிடுவாரு.
உண்மை தெரிஞ்சு மொத்த குடும்பமும் கோவமா இருக்குற டைம்ல, கிறிஸ்டியனா இருந்த பையனை ஹிந்துவாவும், ஹிந்துவா இருந்த பொண்ணை கிறிஸ்டியனாவும் மாத்தி ஒன்னே ஒன்னு தான் சொல்லுவாரு:
'மதம்தான் பெருசுன்னு நீங்க நினைச்சீங்க, ஆனா மனசு தான் பெருசுன்னு அவங்க நினைச்சாங்க' அப்படின்னு, தான் மதத்துல இருந்து வர்றவங்களுக்கு தான் தன் பொண்ணையோ பையனையோ கல்யாணம் பண்ணி கொடுப்பேன் அப்படின்ற அவங்களோட மைண்ட்செட்டை உடைச்சு, அந்த இடத்துல காதலை முன்னிறுத்தி இவரு பேசுற எல்லா டயலாக்கும் கூஸ்பம்ப்ஸா (Goosebumps) இருக்கும்...!!
பொண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது கண்ணுல அந்த வலி, முகத்துல ஒரு சின்ன பொய்யான சிரிப்பு..
'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது'ன்ற லைன் பாடுறப்போ எல்லாம் எப்படி இந்த மனுஷனால முடியுது?
நிஜ வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு பெர்சன் இருப்பாங்களா? அப்படின்னு யோசிக்கிற அளவுக்கு அந்த ஒரு கேரக்டர் நம்ம மனசுல ஆழமா பதிஞ்சிருக்கும்.
கடைசியா, 'ஆஃப்டர் ஆல் (After all) ஒன் சைட் லவ் தானே, இதுக்கு போய் இவ்வளவு ஃபீல் பண்றீங்களா?'ன்னு கேட்கும்போது நிறைய விஷயங்கள் சொல்லிட்டு ஒரு விஷயத்தை ரொம்ப அழுத்தமா சொல்லுவாரு.
அது அந்த பொண்ணுக்கு மட்டும் இல்ல, நம்ம எல்லாருக்கும் சொல்ற மாதிரி இருக்கும்... 'இந்த முடிவு உங்களுக்கு வேணா சோகமா இருக்கலாம், ஆனா எனக்கு சுகமா தான் இருக்கு' அப்படின்னு சொல்லிட்டு, அந்த பை எடுத்துட்டு அங்க நடந்த எந்த விஷயத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்ற மாதிரி அந்த மனுஷன் அமைதியா ஒரு நடை நடந்து வெளிய போவாரு... அப்பா, அப்படி இருக்கும்! விக்ரமன் சார்!"
கருத்துரையிடுக