Friday, August 2, 2024

GENERAL TALKS - CONCLUSION - இதுதான் கடைசி பதிவு !

 





இந்த வலைப்பூவில் பெர்ஸனல் கருத்தாக நான் பதிவு பண்ணப்போகும் கடைசி பதிவு இதுதான். இதுக்கு மேல் பெர்ஸ்ஸனல் பதிவுகளை எழுத மாட்டேனா என்று கேட்டால் நான் கண்டிப்பாக எழுதுவேன் ஆனால் இதுவரைக்கும் எழுதிய பெர்ஸனல் பதிவுகளை கண்டிப்பாக இன்னொரு முறை நன்றாக ரிவிஸன் பண்ண வேண்டும். இனிமேல் வாழ்க்கையில் கஷ்டங்களை அதிகமாக பார்க்கபோகிறேன். காரணம் என்னவென்றால் அதிகமாக நான் கஷ்டப்பட போகிறேன். ஜெனரல் டாக்ஸ் ஸெக்மென்ட்டை பொறுத்தவரைக்கும் நிறைய விஷயங்களை நாம் விறுப்பு வெறுப்பு இல்லாமல் பேசி இருக்கிறோம். ஜெனரல் டாக்ஸ் நமக்கு தேவையான விஷயம்தான். இருந்தாலும் இப்போது எல்லாமே கம்மெர்ஷியலான விஷயங்கள் வலைப்பூவில் பதிவு பண்ணப்பட்டால்தான் போதுமான வெற்றியை இந்த வலைப்பூவுக்கு கொடுத்து இருக்கிறது. இந்த வகையில் ஜெனரல் டாக்ஸ் அவ்வளவு பிரமாதமான வெற்றியை கொடுக்கவே இல்லை. இந்த வலைப்பூவில் இருந்து எனக்கு கிடைக்கும் வருமானம் கொஞ்சம்தான் இருந்தாலும் வாழ்க்கை என்பது ஒரு போர். இங்கே இந்த வகையில் இருக்கும் இந்த குட்டி வருமானத்தை வைத்துக்கொண்டு சாதனைகளை எல்லாம் செய்ய முடியாது. இந்த வலைப்பூவுக்கு ஜெனரல் டாக்ஸ் ஸெக்மென்ட் மிக்கவுமே முக்கியமானதுதான் ஆனால் பொழுது போக்கு வேல்யூக்களை இந்த ஸெக்மெண்ட்கள் கொடுக்கவில்லை. மேலும் வலைப்பூவின் தரத்துக்கு ஏற்ற கன்ட்டேன்ட்டாகவும் ஜெனரல் டாக்ஸ் இல்லை ! இந்த வலைப்பூவில் இருந்து வருமானம் கிடைத்தே ஆகவேண்டும். இதனால்தான் இந்த மாற்றம். அதுவரைக்கும் இன்னொரு புதிய ஜெனரல் டாக்ஸ் பதிவை கொடுக்க முடியாது. மிக மிக அவசியம் என்றால் ஸ்பெஷல் டாக்ஸ் என்று தெளிவான கட்டுரைகளை பதிவிட முயற்சிக்கிறேன். இன்றைக்கு தேதிக்கு கடைசியாக ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றால் நான் நானாக 100 சதவீதம் மாறவேண்டும். நான் ஒரு சிறிய இரும்பு அறைக்குள்ளே அடைக்கப்பட்டு இருக்கிறேன். இதனால் ஜெனரல் டாக்ஸ்ஸில் போதுமான அளவுக்கு என்னுடைய பேர்ஸனல் சொல்லிக்கொள்ளும் அளவுக்கே இப்போது இல்லை. மறுபடியும் நான் பதிவுகளை எப்போது நான் என்னுடைய 100 சதவீதம் ஆசைகளையும் நிறைவேற்றி முடிக்கின்றேனோ அப்போது பதிவிடுகிறேன். அதுவரைக்கும் குறைவான அளவுக்கே பெர்ஸனல் கருத்துக்கள் பதிவிடப்படும் என்பதுதான் இந்த வலைப்பூவில் இப்போது எடுத்து இருக்கும் முடிவு ! ஏதேனும் மறுப்பு மற்றும் மாற்று கருத்து இருந்தால் கண்டிப்பாக கம்மென்ட்டில் பதிவிடவும் !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...