Sunday, August 4, 2024

தேவையற்ற போட்டிகள் முட்டாள்தனமானது - TAMIL SHORT STORY !



ஒரு காட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது ஒரு சிங்கம். இந்த சிங்கத்துக்கு ஒரு ஆசைவந்தது . தன் காட்டில் வாழ்கின்ற மிருகங்களில் எதற்கு அதிக திறமை இருக்கிறது என்று சோதிக்கப் பார்க்க விரும்பியது. அன்று மாலை காட்டில் உள்ள எல்லா மிருகங்களையும் அழைத்து தான் நடத்தப் போகும் சோதனையை விளக்கி, நாளைக் காலையில் எல்லா மிருகங்களும் என் இடத்துக்கு வர வேண்டும் என்று சொல்லியது. அன்றிரவு மிருகங்கள் யார் அந்தத் திறமைசாலி என்று குழம்பிக் கொண்டே உறங்கச் சென்றது. காலையில் சிங்கம் நம் திறமையை எப்படி சோதனை செய்யப் போகிறதோ? என்ற கவலையில் எல்லா மிருகங்களும் சிங்கத்தின் இருப்பிடத்துக்கு வந்தன.
குகையில் இருந்து வெளியே வந்த சிங்கம் அங்கு கூடி இருந்த மிருகங்களை பார்த்து, ”அதோ தொலைவில் தெரிகிறதே, அந்தப் பனை மரத்தின் உச்சிக்கு யார் முதலில் சென்று வருகிறீர்களோ, அவரே சிறந்த திறமைசாலி என்றது. திகைத்துப் போன மிருகங்கள் மரத்தை நோக்கி ஓடிச் சென்றது. அதில் ஏறத் தொடங்கின. முதலில் மரத்தின் உச்சியை அணில் தொட்டது. மற்ற எவற்றாலும் பாதி உயரம் கூட ஏற முடியவில்லை. வெற்றி பெற்ற அணிலோடு காட்டின் தலைவனான தான் போட்டி இடப்போவதாக அறிவித்தது சிங்கம் ஆனால் அந்த சிங்கத்தால் மரத்தில் ஏற முடியாமல் தோல்வியை தழுவியது. குழம்பிப் போன சிங்கம் ஒவ்வொரு மிருகத்திடமும் அதனதன் திறமையைக் கேட்டு அறிந்தது. சிறுத்தை நன்றாக ஓடுவேன் என்றது. குரங்கு மரம் விட்டு மரம் தாவுவேன் என்றது. யானை நான் அதிக எடையை சுமப்பேன் என்றது. இப்படியாக காட்டில் ஒவ்வொன்றுக்கும் ஒரு திறமை உண்டு என்பதை அறிந்து கொண்டது சிங்கம். மேலும் எல்லோருக்குமே வேறு வேறு திறமைகள் இருக்கும்போது இவ்வாறு திறமையை சோதிக்க அனைவருக்கும் ஒரே மாதிரி போட்டி வைத்த தனது மடமையை எண்ணி வருந்திய சிங்கம், பின்னர் தெளிவு அடைந்தது. உங்களை நீங்கள் மற்றவர்களோடு சேர்த்து பார்த்து மற்றவர்களின் திறமையோடு போட்டி போடுவது முட்டாள்தனம் ! உங்கள் திறமைகளை மட்டும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துங்கள். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...