Saturday, August 10, 2024

GENERAL TALKS - இதுவும் கொஞ்சம் பெர்சனல் பதிவு !



இந்த உலகம் மிகவும் கடினமானது, இங்கே நிஜத்தில் வெற்றி அடைய முடியாத விஷயங்களை அடையவேண்டும் என்று போராடி கடைசியில் கற்பனையை நம்பி ஏமாறுகிறோம், வாழ்க்கை மிகவும் கடினமானது, நிறைய வலிகளை கொடுக்க கூடியது. அறிவும் செல்வமும் அனுபவமும் இருப்பவர்கள் கடினத்தன்மையில் இருந்து தப்பித்து செல்லலாம். இருந்தாலும் உலகம் மிகவும் கடினமானது, மனதுக்கு மிகவும் கடினமான விஷயங்களை கொடுக்ககூடியது. வாழ்க்கையே பெரிய சாதனைதான். கடைசி நாட்கள் வரும்போது நிறைய பேச வேண்டும் என்று தோன்றும், கடந்த காலம் எல்லாம் மறுபடியும் ஒரு முறை கிடைத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என்று தோன்றும், இங்கேதான், இந்த மாதிரி கற்பனையில்தான் வாழக்கூடாது. கற்பனை ஒரு கற்பனையான பாதை. இந்த பாதை வெற்றிகளை கொடுக்காது. உனக்கும் எனக்கும் இருக்ககூடிய பிரிவு என்னைக்குமே நிரந்தரம் கிடையாது. இந்த உலகத்தில் இருக்கும் எட்டு பில்லியன் மக்களை கடந்தது நிறைய ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்தது ஒரு நாள் நாம் சேர்ந்து வாழக்கூடிய நாட்கள் வரும் என்று நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை. இந்த பிரச்சனைகளை அறிவுப்பூர்வமாக மட்டுமே அணுக வேண்டும் என்பதை நான் மிகவும் கடினப்பட்டு தாமதமாக கற்றுக்கொண்டேன். ஒரு காதலை நான் எப்படி சொல்ல முடியும். ஒரு அணுவின் துகள் என்று சொல்லலாமா ? இல்லையென்றால் பிரபஞ்சத்தின் எல்லை என்று சொல்லலாமா ? உண்மையில இந்த வாழ்க்கை ஒரு மனிதனுக்கு மொத்தமாக எண்பது ஆண்டுகள் வாழ்நாள் கொடுக்கும்போது எத்தனை ஆண்டுகள் நேசிக்கப்பட்டு செலவு செய்ய முடிக்கிறதோ அத்தனை நாட்கள்தான் எந்த ஒரு உனமையான அன்பும் நிலைக்கும். ஒரு அன்பினால் காலத்தை கடந்து செல்ல முடியாது. ஆனால் அன்பினால் ஒரு சிறப்பான காலத்தை கொடுக்க முடியும். மனதுக்குள் நிறைய துன்பங்கள் இருந்தாலும் நான் உனக்காக என்னால் முடிந்த வரைக்கும் போராடுகிறேன். இந்த ஒரு நாள் நான் இனிமே கவனமாக இருப்பேன் என்று முடிவு எடுக்கிறேன். நானும் இந்த பிரபஞ்சத்தின் சாதாரண துகள் மட்டும்தான். ஒரு நாட்குறிப்பு போல நிறைய குறிப்புகள் எடுக்க இந்த வலைப்பூக்கள் எழுதுவது எனக்கு பழகிப்போய்விட்டது. இனிமேல் கற்பனையில் இருக்க மாட்டேன். இந்த கடினமாக இருக்கும் பயணத்தில் வெற்றியை கொடுத்தாலும் தோல்வியை கொடுத்தாலும் என்னுடைய வாழ்க்கையில் கற்பனைகளுக்குள் முடிந்த வரையில் மாட்டிக்கொள்ள மாட்டேன். நீ காற்றாக நான் மரமாக ஒரு வாழ்க்கையை வாழவே ஆசைப்படுகிறேன். இதுவும் கொஞ்சம் பெர்ஸனல் பதிவு ! இங்கே எல்லோருக்கும் இந்த பதிவு புரியவேண்டும் என்று அவசியம் இல்லை ! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...