Friday, August 9, 2024

GENERAL TALKS - கொஞ்சம் கருத்துக்கள் தேவைப்பட்டுக்கொண்டு இருக்கிறது !

 


இந்த வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம் என்னனா அது அறிவுதான் , உங்களால் எவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுமோ அவ்வளவு விஷயங்களை தெரிஞ்சுக்கங்க. வாழ்க்கையில் அறிவு உங்களுக்கு நிறைய நன்மைகளை கொடுக்கும் , இந்த உலகத்தில் யாருக்கு இல்லை கஷ்டம் ?, இந்த கடந்த காலம் எல்லாம் முடிஞ்சு போன விஷயங்கள்தான். இந்த கடினமான நினைவுகளை நினைத்து பார்க்கும்போது இழப்புகள் , தோல்விகள் , வலிகள் , மனக்கசப்புகள் அப்படின்னு நிறைய விஷயங்கள் இந்த நினைவுகளுக்குள் அடங்கியிருக்கும். இருந்தாலும் இன்றைக்கு நீங்கள் நினைத்தால் கூட உங்களால் உங்களுடைய எதிர்காலத்தை மாற்ற முடியும். இந்த வாழ்க்கையில உண்மையான விஷயங்களுக்கும் பொய்யான விஷயங்களுக்கும் இருக்கக்கூடிய வேறுபாட்டை நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டும். நிறைய கற்பனையான விஷயங்களில் உங்களுடைய முதலீடு இருக்க கூடாது, இந்த உலகத்துல எல்லாமே நன்மைக்கே என்ற நம்பிக்கை மனதுக்குள் எப்போதுமே இருக்க வேண்டும். நிறைய பேருக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்போது அந்த நன்மைகளை அதிர்ஷ்டம் என்று நினைக்கலாம் ஆனால் அதிர்ஷ்டம் என்ற ஒரு விஷயம் இங்கே இல்லவே இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் எனக்கு நிறைய தோல்விகளும் இழப்புகளும் கிடைத்திருக்கலாம் என்னுடைய வாழ்க்கையில் மனக்கசப்பான விஷயங்கள் நிறையவே இருக்கலாம் ஆனாலும் எல்லாமே கடந்த காலம்தான். திரைப்படங்களை போல காலத்தை கடந்து இங்கே எல்லாவற்றையும் மாற்ற முடியாது , ஆனால் இன்றைக்கு நினைத்தால் கூட சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வர முடியும். இந்த சின்ன சின்ன மாற்றங்கள் ஒரு காலத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். இந்த மாற்றத்தால் வெற்றிகள் கிடைக்கலாம். உங்களுடைய வாழ்க்கையில் நடந்த எந்த ஒரு வெற்றியையும் தோல்வியையும் உடைத்து பார்க்கும்போது நிறைய சின்ன சின்ன விஷயங்கள்தான் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் காரணமாக இருந்துள்ளது. இதுக்கு என்ன காரணம் என்று கேட்டால் நிறைய RANDOM ஆன விஷயங்கள் சேர்ந்ததுதான் இந்த வாழ்க்கை.  இந்த வாழ்க்கையில் இந்த மாதிரியான கருத்துக்கள் எனக்கு தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது !



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...