இந்த மாதிரி ஒரு தரமான சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த ஃபேண்டஸி படத்தை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. இந்த படம் 2 மணி நேரம் ரன்னிங் லெந்த் இருந்தாலும் கொஞ்சமுமே போர் அடிக்கவில்லை. சிறிய வயதில் இருந்தே அம்மா இல்லாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்க்கப்படும் ஒரு பள்ளி மாணவியின் கதை எப்படி ஃபேண்டஸி உலகத்தில் இருக்கும் ஒரு மாயாஜாலாமான இஞ்சீனியர் இளவரசியின் கதையோடு கலந்துவிடுகிறது என்பதை இந்த படத்தில் நன்றாக காட்டியுள்ளார்கள். நிறைய ஜப்பான் அனிமேஷன் படங்களில் ஒரு EPIC ஆன உணர்வு வரவேண்டும் என்று கேரக்ட்டர்களின் எமோஷன்களை குறைத்து டார்க்காக கதையை நகர்த்துவார்கள். அப்படிப்பட்ட தவறை இந்த படம் செய்யாமல் இருந்ததால்தான் இந்த படம் சாதிக்கிறது. கிளைமாக்ஸ் வரைக்கும் திரைக்கதையில் அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்போடு கொஞ்சம் ஃபேண்டஸி பாணியில் அமைக்கப்பட்ட டெக்னோ திரில்லர் படமாக இந்த படம் வெற்றி அடைகிறது. மற்றபடி கண்டிப்பாக பார்க்கவேண்டிய அனிமேஷன் படங்கள் என்ற பட்டியலில் இந்த படத்தை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம். உங்களுடைய இரண்டு மணி நேரத்துக்கு ஒரு புதுமையான நேர்த்தியான கதையை இந்த படம் உங்களுக்கு சொல்லும் என்றால் மிகையாகாது.
No comments:
Post a Comment