Sunday, August 4, 2024

MUSIC TALKS - ADHO MEGA OORVALAM ADHO MINNAL THORANAM ANGE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே 
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன் 
இதோ நான் உயிரினில் உன்னைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே 
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே

உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு 
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே 
ஆடையிங்கு வேண்டுமா ? நாணம் என்ன ? வா வா

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே 
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே

குழலை பார்த்து முகில் என மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப் போல் தேவி புன்னகை 
வண்டு ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் 
காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே 
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன் 
இதோ நான் உயிரினில் உன்னைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே 
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...