Sunday, August 4, 2024

கவனமாக இருப்பது நம் சாமர்த்தியம் ! - TAMIL SHORT STORY !


இந்த காலத்தில் வியாபார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் இல்லை என்றால் ஏமாற்ற எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு கிராமத்தில் நமது கதாநாயகர்  நல்ல நீர்வளம் நிறைந்த கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார். மறுநாள் கடைத்தெருவில் நமது கதாநாயகர் நடந்து போய்க் கொண்டிருந்த போது கிணறு விற்ற நபர் அவரை சந்தித்தார். "அப்பவே சொல்ல மறந்துட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு விற்றது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டியது வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். அப்ப நம்மாளு தயங்காமல் "நேத்து நானே உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் உங்கள் தண்ணீர் எனக்கு வேண்டாம். ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலி பண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்று சொன்னார் ! குறிப்பிட்ட நபர்களிடம் இப்படித்தான் பேச வேண்டும் இல்லையென்றால் அவர்களுடைய சுய நலத்துக்கு நம்மை பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள் !

No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...