Sunday, August 4, 2024

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா ! - TAMIL SHORT STORY !

 



ஒரு NANO கார் ஹைவே'ல பழுதாகி நின்னிருச்சு. அதுக்கு உதவி செய்ய ஒரு AUDI கார் உரிமையார் முன்வராரு.

"நான் உங்க NANO காரை அடுத்த ஊர்வரைக்கும் கயிறு கட்டி இழுத்துக்கிட்டுப் போறேன் .
எப்பவாவது வேகம் அதிகமாயிருச்சுனு தோனுனா நீங்க உங்க ஹெட்லைட்ட டிம்/பிரைட் பண்ணுங்க'ன்னாரு
டோப்பிங் ஆரம்பிச்சு ஒரு கிலோமீட்டர் போயிருக்கும் போது,
அந்த AUDI கார ஒரு BMW கார் செம வேகத்துல ஓவர்டேக் செய்யுது...! AUDI கார்க்காரர் காண்டாயிடுராரு...

"AUDI காரை, BMW கார் ஓவர்டேக் பண்ணுறதா ? நெவர்..."

ரெண்டு பெரிய காருக்கும் பலத்த போட்டி...
150 கிலோமீட்டர் ஸ்பீடு...
NANO க்காரர் லைட்ட போட்டுப்போட்டு அணைக்கிறாரு, பயந்துகிட்டு...
ஆனா AUDI காரர் கண்டுக்கவே இல்ல. வேகமும் குறைக்கல.

இதப் பாத்த ஒரு போலீஸ்க்காரர் தன்னோட வாக்கிடாக்கிய எடுத்து அடுத்த செக் போஸ்ட்ல கூப்பிட்டு சொல்றாரு...

ஒரு AUDI காரும், BMW காரும் போட்டி போடுறாங்க 150 கிலோமீட்டர் ஸ்பீடு...!

அதுல முக்கியமான விஷயம் என்னன்னா? ஒரு NANO கார் அவங்கள ஓவர்டேக் பண்ண லைட்ட அடிச்சுக்கிட்டே பின்னாடியே விரட்டிக்கிட்டு போகுது...!

யாருக்கு என்ன பிரச்சினைன்னு இங்கே யாருக்கும் தெரியாது. எதையோ பாக்குறது, கேக்குறத வச்சு அவர்களாவே ஒரு யூகத்துக்கு வந்து முடிவும் பண்ணிடுவாங்க...!

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...