இந்த உலகத்தில் அன்பு மட்டும் எவ்வளவு தொலைவுகளையும் கடந்து சென்று சேர்ந்துவிடும் , ஒரு துளி நடிப்பு இல்லாத பொய்கள் இல்லாத வணிக நோக்கங்கள் இல்லாத கடைசிவரையில் நிலைக்கும் அன்புதான் எப்போதும் உண்மையான அன்பு , இங்கே நம்முடைய நேசம் எல்லைகளை கடந்தும் சாதிக்க வேண்டும். வாழ்க்கை என்பதே வெற்றிகளுக்கான போராட்டம்தான். உண்மையான நேசம் ஒரு கண்ணாடி மெடல் போன்றது என்று அடிக்கடி சொல்லிக்கொள்வேன். அந்த நேசம் மிகவும் மென்மையானது , தூய்மையானது , வெளிப்படையானது . இந்த உலகத்தில் உண்மையான அன்பை தேடுகிறேன். பிடித்த விஷயங்களை செய்தால் நேசிப்பதையும் பிடிக்காத விஷயங்களை செய்தால் வெறுப்பதையும் அன்பு என்று பெயர்போட்டுக்கொள்ள முடியாது . பயனை எதிர்பார்த்து செய்யக்கூடிய செயல்கள் வணிகம் போன்றது. உன்னை நான் நேசிக்க எனக்கு எந்த ஒரு காரணமும் கிடையாது. அப்படி நேசிப்பதற்கு காரணங்களை தேடிக்கொண்டு இருந்தால் உன்னை நான் நேசிக்க காரணமான அந்த விஷயங்கள் உன்னை விட்டு போன பின்னால் உன்னை நான் வெறுக்க வேண்டும் அல்லவா ? இது எப்படி நேசிப்பதாக சொல்ல முடியும் ? நான் கடைசி காலம் வரையில் உன்னோடு இருக்க வேண்டும் , நிறைய விஷயங்களை பேச வேண்டும். தொலைதூர பயணங்களை செல்ல வேண்டும். ஒரு சராசரி மனிதராக என்னுடைய ஆசையும் வாழ்க்கையில் வெற்றி அடைவதுதான். ஆனால் உன்னுடைய நேசம் இல்லாத இந்த வலிகளை என்னால் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த நேசம் மிக மிக அதிகமான தூரத்தில் கூட குறையாமல் இருக்கும். அளவுகள் இல்லாதது , இந்த நேசம் கணிதத்தின் எண்களால் வரையறுக்கமுடியாதது . எல்லைகள் இல்லாத இந்த வானம் அளவுக்கு உன்னை நேசிக்கிறேன். உன்னுடைய இந்த பிரிவு என்னை வலிகளுடன் வாழவைக்கிறது. எப்போதுமே உன்னுடைய நலத்தையும் பாதுகாப்பையும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். உன்னுடைய வாழ்க்கையில் நீ எப்போதும் சந்தோஷமாகவும் நலமாகவும் வாழ வேண்டும் , வாழ்க்கை என்றாலே கஷ்டமான விஷயங்கள் நிச்சயமாக இருக்கும் , நிறைய போராட்டங்களை கடந்து வெற்றி அடைவதுதான் வாழ்க்கை . நான் நிறைய வருடங்கள் காத்திருக்கிறேன். கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன். அன்பில் உண்மையான அன்பு மற்றும் பொய்யான அன்பு என்று எதுவுமே இல்லை, ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற அன்பு மட்டுமே போதுமானது என்று சொல்ல முடியாது , வாழ்க்கையில் மதிப்பு மரியாதை மற்றும் கெளரவம் மிகவும் அவசியமானது. சொந்தமாக நிறுவனத்தை உருவாக்க முயற்சி செய்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களோ நண்பர்களோ இல்லையெனில் யாரேனும் ஒருவர் கூட சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் நாம் வெற்றியடைந்துதான் ஆகவேண்டும் , காரணம் என்னவென்றால் இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கும் , மனிதர்களுடைய மனதும் மாறிக்கொண்டே இருக்கும் இங்கே எப்படியாவது எதிர்காலத்தில் உருவாக்கக்கூடிய பிரச்சனைகளை நிகழ்காலத்தில் முடிக்க வேண்டும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. காலத்தை மிகச்சரியாக பயன்படுத்துபவர்களே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். காலத்தின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்ல ஒரு சிறப்பான துணிவு வேண்டும் . ஒரு இடத்தில் ஆதரவு இல்லையென்றால் அங்கே முன்னேற்றமும் இருக்காது, அன்பு காட்டியவர்கள் வெறுக்கலாம், ஆனால் மரியாதை அன்பை விடவும் மேலானது வெற்றி கிடைப்பதற்கு அன்பு மட்டுமே போதாது , சிறப்பாக செயல்பட அறிவுத்திறன் தேவைப்படுகிறது .இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால் உண்மையான அன்பு இருக்கும்போது அங்கே வணிக நோக்கங்கள் இருக்காது. இந்த உலகத்தில் வாழ்க்கையை பார்க்கும்போது எல்லோருக்குமே நிறைய கனவுகள் இருக்கும். ஆனால் ஆசைப்பட்ட விஷயம் கிடைக்காமல் நிறைய நேரங்களில் பணம் இல்லாத காரணத்தால் தோற்றுப்போகவேண்டிய நிலை உருவாகிறது. வெற்றி அடைய முடியும் என்றாலும் கூட தோற்றுப்போவது மனதுக்கு மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயம். ஆனால் இந்த உலகத்துக்கு எப்போதுமே தனிப்பட்ட மனிதனுடைய உடல்நிலை மற்றும் மன நிலையை பற்றி கவலை இல்லை. பணம் இல்லையென்றால் வெற்றிக்கான இந்த போராட்டத்தில் ஒரு சிறிய அளவில் கூட சலுகைகள் கிடையாது. தவறு செய்தால் தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்பதுதான் இந்த உலகம் காட்டக்கூடிய பாதை. மிகச்சரியான அறிவு மட்டுமே அந்த பாதையில் வெற்றியை அடைய கிடைக்கும் சூரியனின் வெளிச்சம் போன்றதாகும். நான் காலங்களை கடந்து செல்ல ஆசைப்பட்டேன். என்னுடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட சில அன்பான நாட்கள் மட்டுமே திரும்ப திரும்ப கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஓரு சிறிய தொழில்நுட்பம் கூட இல்லாமல் மரத்தின் நிழலின் குளிர்ச்சியில் நிதானமாக காலை உணவு உண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டேன். சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாமல் ஒரு தூய்மையான உலகம் இருக்க ஆசைப்பட்டேன். இணையத்தில் இருக்கும் அத்தனை தளங்களும் தமிழ் மொழியில் இருக்க ஆசைப்பட்டேன். உன்னோடு நான் சேர்ந்து வாழ்ந்தால் மரணமே இருக்கக்கூடாது என்று ஆசைப்பட்டேன். காதலில் மனது கொள்ளையடிக்கப்பட்டால் அது ஒரு நிரந்தரமான இழப்பு.. கடைசிவரையில் கொள்ளையடிக்கப்பட்ட மனது கிடைக்கப்போவதே இல்லை..
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
-
HEY ! கண்ணு குட்டி சொல்லுங்க மாமா குட்டி ! என்ன இந்த TIME LA CALL பண்ணியிருக்கிங்க ? உன் நெனப்பாவே இருக்குடி நாம இன்னொரு LONG DRIVE போலாமா? ...
No comments:
Post a Comment