Sunday, August 4, 2024

MUSIC TALKS - DEEWANA DEEWANA NETRI NANAITHTHAVAN NEEDHANA EN VEETU KOLATHTHIN PULLIKUL NUZHANDHU NAM KADHAL SOLLUM MAAYA KANNANA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா 
தீவானா ஓ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீ தானா
என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து 
நம் காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில் 
வால்முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே
கீச்சுக்கீச்சென்று கூச்சல் போடுதே
நெஞ்சுக்கூட்டில் கூடுகட்ட மல்லுக்கட்டுதே
சும்மா அது கத்திச் செல்லுமோ ?
இல்லை யம்மா நெஞ்சை கொத்திச்செல்லுமோ ?

அன்னை தந்தையை ஆசை தோழியை 
காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே
தூக்கம் விற்று தான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே

அய்யோ இன்னும் என்னவாகுமோ ?
எந்தன் ஆடை நாளை கொள்ளைபோகுமோ ?

காதல் எண்ணமே அய்யோ அசிங்கமே 
என்று கண்கள் காது மூக்கு பொத்தி கொண்டவள்
காதல் காலடி ஓசை கேட்டதும் 
வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டனள் !
காதல் உள்ளே வந்து விட்டது 
எந்தன் நாணம் வெளியே சென்றுவிட்டது

தோழி ஒருத்தியை நேரில் நிறுத்தி நான் 
காதலுற்ற சேதி சொல்ல நெஞ்சம் முட்டுதே

ஆனால் நாவிலே ஆனா ஆவன்னா 
இண்டெழுத்தை தவிர வேறு வார்த்தையில்லையே
ஆசை வந்துதத்தளிக்கிறேன் என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன் !

தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா 
தீவானா ஓ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீ தானா
என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து 
நம் காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...