Sunday, August 4, 2024

MUSIC TALKS - EN KAADHAL SOLLA NERAM ILLAI UN KAADHAL SOLLA THEVAI ILLAI NAM KAADHAL SOLLA VAARTHAI ILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவையில்லை
நம்காதல் சொல்ல வார்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே என் வெயில் காலம் அது மழைக்காலம்
உன் கனவாலே உன் கனவாலே மனம் அலைபாயும் மெல்ல குடைசாயும்
என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவையில்லை
நம்காதல் சொல்ல வார்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடி

காற்றோடு கை வீசி நீ பேசினால் எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான் கள்ளத்தனம் வந்து குடியேறுமோ ?
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி இந்த விளையாட்டை ரசித்தேனடி
உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன் என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிக்கின்றதே
என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவையில்லை
நம்காதல் சொல்ல வார்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தெரியாதடி

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...