இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள்தான் அடுத்த நாளில் உங்களுக்கான மதிப்பையும் மரியாதையும் கொடுக்கும். வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய பயணம். போதுமான சம்பளம் இல்லாத அலுவலக வேலைக்கு வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அல்லது வெற்றிகரமான விஷயங்கள் இருக்காது. ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும்போது அந்த வேலைக்கு தேவைப்படும் விஷயங்களையும் தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் எந்த ஒரு துறையை எடுத்து முன்னேற நினைத்தாலும் அந்த துறை சார்ந்த அனுபவ அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்துக்கு ஒரு சிறிய உதாரணம் சொல்லவேண்டும் என்றால் ஒரு காலத்தில் கணினியில் செய்யப்பட்ட நகலாக்கம், காணொளி எடிட்டிங், போட்டோகிராபி, இ-மெயில் அனுப்புதல் போன்ற செயல்கள் இன்று ஸ்மாரட்போனில் செயல்படுத்தப்படுவதை பார்க்கலாம். கணினி அறிவியல் என்று இல்லாமல் இந்த உலகத்தின் எந்த ஒரு துறையிலும் ஒவ்வொரு வருடமும் புதிய புதிய விஷயங்கள் உருவாவதால் படிப்பறிவை விட அனுபவப்பூர்வமான அறிவே முன்னேற்றத்துக்கு கை கொடுக்கும் . உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் மோசமான விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு சப்போர்ட் செய்யக்கூடிய நல்ல விஷயங்களும் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும். ஒரு இடத்தில் இருள் இருந்தால் இன்னொரு இடத்தில் வெளிச்சம் இருப்பது போல கெட்ட சக்திகள் இந்த உலகத்தில் இருந்தால் நிச்சயமாக நல்ல சக்திகளும் இந்த உலகத்தில் இருக்கும். இந்த வாழ்க்கை எனும் போராட்டத்தில் நீங்கள் பொய்யாக இல்லாமல் உண்மையாக போராடினால் நிச்சயம் அந்த நல்ல சக்திகள் உங்களுடைய வெற்றியை உங்களுக்காக கெட்ட சக்திகளிடம் சண்டைபோட்டு வாங்கியாவது உங்களுடைய உள்ளங்கைகளில் கொடுத்துவிடும். இதனால்தான் வாழ்க்கை எனும் பயணத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை என்பது மிகவும் முக்கியமானது. இந்த வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் மிகவுமே முக்கியமான விஷயம் நாம் நாமாக இருக்க வேண்டும். பொய்கள் சொல்லாமல் சமாளிக்க நடிக்காமல் 100 சதவீதம் உண்மையான மன நிலையில் இருக்க வேண்டும். மனதுக்குள் ஒரு மாற்றம் வேண்டுமென்றால் அந்த மாற்றத்தை 100 சதவீதம் உருவாக்க வேண்டும். இல்லை நான் நானாகவே 100 சதவீதம் இருக்கவேண்டும் என்று நினைத்தால் அதுவும் சிறப்பானதே. ஆனால் இந்த காதல் என்ற விஷயத்தில் மட்டும் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் அன்பு அதிகமாகும். இது எல்லாமே எப்போதோ எழுதிய விஷயங்கள் நான் இப்போது பதிவு பண்ணிக்கொண்டு இருக்கிறேன் !
No comments:
Post a Comment