Wednesday, August 7, 2024

GENERAL TALKS - சூறாவளியை போல பறந்து வெற்றியடைய முடியாது !


வெற்றி என்பது மிகவும் கடினமானது. உங்களிடம் போதுமான வளங்கள் இருந்தால் வெற்றியை விலை கொடுத்து வாங்கிவிடலாம். உங்களிடம் எதுவுமே இல்லை என்றால் நீங்களாக வாழ்க்கையில் கஷ்டப்பட்டால்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 2010 ல் வெளிவந்த தமிழ் படம் - என்ற நகைச்சுவை திரைப்படத்தில் இடம்பெற்ற "ஒரு சூறாவளி கிளம்பியதே.." பாடல் காட்சியில் இடம்பெற்றது போல வெற்றி என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைப்பது இல்லை‌.. வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம் இருந்தாலும் சும்மா இருக்காமல் மொத்தமாக பிரச்சனைகளை சமாளிக்க கொடுக்கும் நேர்மையான முயற்சிகளால் பிரச்சனைகளை சரி செய்ய முடியும். கடந்த கால வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எந்த ஒரு செயலையும் மறுபடியும் இன்னொரு முறை தொடங்க முடியும். வாழ்க்கை என்பது சினிமா இல்லை‌.. ஒரு முறை வெற்றி கிடைக்க குறைந்தது  பதினைந்து முறையாவது முயற்சிகளும் தோல்விகளும் கிடைக்கும் இவைகளை எல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நிஜ வாழ்க்கையில் உள்ள ரியாலிட்டியான உலகம். ஒரு முறை கூட தோற்காமல்  உங்களால் ஒரு வெற்றி அடைய முடியுமா ? அப்படியென்றால் கவலையே படவேண்டாம். வெற்றி அடைந்துவிடுங்கள். வாழ்க்கையில் எப்போதுமே ஒரு மேஜிக் தேவைப்படுகிறது இத்தகைய மேஜிக் எனும் மாயாஜாலத்தை நீங்கள்தான் நிகழ்த்த வேண்டும் என்றும் உங்களுக்காக யாருமே சப்போர்ட் பண்ண மாட்டார்கள் என்றும் புரிந்துகொள்ளுங்கள்‌. உங்களுடைய ஆசைகளை விட தேவைகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். நிறைய வெற்றிகளை அடைந்த பின்னால் வாழ்க்கையில் அனைவருமே சிறப்பாகவும் நலமாகவும் வாழ முடியும். இந்த சிறப்பான வாழ்க்கையை அடைய செல்ல வேண்டிய பாதை வெற்றிகளாகவே இருக்கட்டும். இந்த உலகத்தில் வாழ்க்கை மிகவும் கடினமானது. அதனால் பணம் சம்பாதிப்பது மற்றும் உங்களுக்கு சரியான வேலைக்கு செல்வது எல்லாம் முக்கியமான விஷயம் ஆகும். வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் சேர்ப்பது மட்டுமே வெற்றி அல்ல என்று நிறைய பேர் சொன்னாலும் உண்மையில் உங்களுடைய வெற்றியை அடைய பணம் என்பது நிச்சயமாக தேவைப்படுகிறது. தூய்மையான தெளிவான மற்றும் முழுமையான முடிவுகள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும்.இது வெற்றியை அடைவது பற்றி யாருமே புரிந்துகொள்ளாத ஒரு ரகசியமான கான்ஸேப்ட் ஆகும் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...