-
இந்த சினிமாக்களில் மட்டுமே நாம் உண்மையாக நேசிப்பவர்களை காப்பாற்றுவது என்பது சுலபமான விஷயமாக காட்டப்பட்டு இருக்கிறது. உண்மையில் நம்மை நேசிப்பவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களை காப்பாற்ற முடியாமல் விதியானது கடினமாக இரும்பு சுவர்கள் போட்டு தடுக்கும்போது என்ன நடக்கும் என்றால் நம்முடைய மனதுக்குள் நிறைய கோபம் இருந்தாலும் நடப்பு வாழ்க்கையில் போராட முடியாது. இங்கே உண்மையான வாழ்க்கையில் நேசிப்பவர்களை காப்பாற்றுவது என்பது அவ்வளவு கடினமானது. இங்கே எனக்கு மனதுக்கு கடினமான விஷயம் என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் எனக்கு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் உண்மையில் எந்த ஒரு உயிருக்கும் நடக்க கூடாத அவ்வளவு கடினமான சம்பவங்கள் அதனால் நான் உயிரை கொடுத்து போராடினாலும் என்னால் வெற்றியை அடைய முடிவதில்லை. இந்த பிரச்சனைகள் எல்லாம் கடைசியில் பணத்தில் கொண்டு போய் முடிகிறது. பணம் இல்லாத ஒரே காரணத்தால் நிறைய வலிகளையும் வேதனைகளையும் கடினத்தன்மைகளையும் துயரங்களையும் கடந்து மனம் உடைந்தது எல்லாம் போதும். மனம் சோர்வு அடைந்தததும் போதும். இந்த உலகத்தின் மிகவும் கடினமான விதியை கூட அறிவு பயன்படுத்தி வென்றுவிடலாம். இது நடைமுறை வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை சோதனை செய்தே பார்த்துவிடலாம். இப்போது செய்ய வேண்டிய வேலை என்ன ? கடந்த காலத்தை கடந்து வரவேண்டும். எதிர்காலம் மட்டுமே பார்க்க வேண்டும். கடந்த காலத்தை நினைவுபடுத்த கூடாது. நம்முடைய மூளையின் சிந்தனைகள் நம்மை வெற்றியடைய வைக்கும் என்றால் கண்டிப்பாக வேலையையும் நேரத்தையும் நம்முடைய மூளையின் எண்ணங்களுக்கு கொடுத்து வாழ்க்கையில் பணம் சம்பாத்திக்கலாம். இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை பட்ட கடினமான வாழ்க்கை கடைசியில் வீணாக போக கூடாது. இந்த பூமி மிகவும் பெரியது என்பதால் நாம் செய்யும் செயல்களும் பெரியதாக மட்டுமே இருக்க வேண்டும். இது மட்டுமே குறிப்புகள் அல்ல இன்னும் பல குறிப்புகளை பின்னணியில் இந்த வலைத்தளத்தில் செய்ய வேண்டும். விவசாயத்துக்கு மழை போன்று நல்ல வாழ்க்கைக்கு அறிவு தேவை. இது எல்லாமே கொஞ்சம் பெர்ஸனல் பதிவுகள். எல்லோருக்கும் புரியவேண்டும் என்று அவசியம் இல்லை !
No comments:
Post a Comment