Sunday, August 11, 2024

MUSIC TALKS - VIZHI MOODI YOSITHAAL ANGEYUM VANDHAAI MUNNE MUNNE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைகாலம் என் வாழ்வில் வருமா ?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

கடலாய் பேசிடும் வாா்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புாிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திாிந்திடுமே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைகாலம் என் வாழ்வில் வருமா ?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை இழுக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைகாலம் என் வாழ்வில் வருமா ?

6.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...