Sunday, August 11, 2024

MUSIC TALKS - KAADHAL SILIVAIYIL ARAINDHAAL ENNAI - THEEYIN KUDUVAIYIL ADAITHTHAL KANNAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை
கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரி தழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ ? உலகம் இதுதானோ ?

கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை
சேவை பூமியை தினமும் தேனாக்கும் கோபம் துயரங்களை சேர்க்கும்

கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரி தழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ ? உலகம் இதுதானோ ?

அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை
கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை
இவனுடைய உண்மைகளை உளற வழி இல்லை 
தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை
வாழும் மானிடரின் சுமைகள் தீராது காலம் உறவுகளின் தீவு

கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரி தழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ ? உலகம் இதுதானோ ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...