இந்த உலகத்தில் இருக்கும் எல்லோருக்குமே நிரந்தரமான அன்பு தேவைப்படுகிறது. இருந்தாலுமே இப்படி நிரந்தர அன்பை கொடுப்பதில் இங்கே நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. உதாரணத்துக்கு நாம் நேசித்து ஒருவர் மேலே நிரந்தரமான அன்பை கொடுத்தால் பதிலுக்கு அவர்கள் நம் மேலே தற்காலிகமான அன்பைத்தான் கொடுப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் நம்பிக்கை இல்லாத முட்டாள்களாக இருப்பார்கள். இப்படி இருப்பவர்கள் மிகவும் எளிதாக தங்களிடம் இருக்கும் எல்லா மதிப்புள்ள விஷயங்களையும் இழந்து அடுத்தவர்களிடம் உதவி கேட்கும் ஆட்களாக பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவர்களில் முட்டாள்தனத்தில் இருந்து விடுதலை கொடுத்து இவர்களை மாற்ற வேண்டுமென்றால் வருடக்கணக்கில் நாம் போராடி அவர்கள் எந்த வகையில் ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை மிகவும் கவனமாக ஆராய்ந்து அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியவைக்க வேண்டும். இது அடிப்படையில் சாத்தியமற்றது. நான் சாத்தியமற்றது என்று சொல்ல காரணம் என்னவென்றால் இந்த அப்பாவிகளை நேசிப்பது போல நம்பாவைத்து ஏமாற்றுபவர்கள் மேலேதான் தங்களின் முழு நம்பிக்கையை அவர்கள் வைத்து இருப்பார்கள். இப்படி ஏமாற்றுபவர்கள் ஏமாற்றப்படுபவர்களின் மனதை நன்றாக மூளை சலவை செய்துகொண்டு இருப்பதால் நம்மை பாதிக்கப்படப்போகும் மனிதர்களிடம் பேச கூட விடமாட்டார்கள். இவர்கள் சத்துக்களை உறிஞ்சும் பாராஸைட் போல நாம் நேசிக்கும் மனிதர்களோடு ஒட்டிக்கொண்டு அவர்களுடைய சக்திகளை உறிஞ்சிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுடைய கட்டுப்பாட்டை மீறி நாம் நேசிப்பவர்களுக்கு நடக்கும் தவறுகளை புரிய வைக்கவும் முடியாது. நாம் எவ்வளவு நல்லவர்கள் என்றும், நாம் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்றும் புரிய வைக்க முடியாது. ஏமாற்றுபவர்கள் கொடுக்கும் மூளை சலவையில் குழப்பமான கொஞ்சமும் லாஜீக் இல்லாத விஷயங்களை எல்லாம் நம்பும் மனிதர்களாக இவர்கள் மாறிவிடுவார்கள். கிளைமாக்ஸ்ஸில் இவர்கள் நம்பும் மக்களால் நச்சென்று நங்கூரம் போல நம்பிக்கை துரோகம் பண்ணப்பட்டு நான் முன்னதாக சொல்லியது போல வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து நடு தெருவில் பிச்சைக்காரரை போல நிற்கும் வரைக்கும் நாம் எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருந்தோம் என்று இவர்களுக்கு புரியப்போவதே இல்லை. சாமர்த்தியம் வாய்க்காத இப்படிப்பட்ட மனிதர்கள் எப்போதுமே ஏமாந்து போகும் ஆட்களாகவே இருக்கின்றார்கள். இவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இருந்தாலும் இந்த காலத்தில் கடவுளே இவர்களை கண்டுகொள்வது இல்லை.
No comments:
Post a Comment