Tuesday, August 6, 2024

MUSIC TALKS - CHILLENA ORU ,MAZHAI THULI ENNAI NANAIKUDHE PENNE SIRAGUGAL YAAR KODUTHTHATHU NENJAM PARAKKUDHE PENNE - TAMIL SONG LYRICS


சில்லென ஒரு மழை துளி என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஓஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஓஹோ நான் மாறினேன் கண்ணே

அட கருப்பட்டியே என் சீனி கிழங்கே சிரிச்சு கவுக்காத 
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையே நீ கப்பல் ஒட்டாத
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா ?
கைகோா்த்து போகலாமா ?

கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு 
என்று என் விழிகள் அய்யய்யோ என்னை திட்ட 
கோடை கால மழை வந்து போன பின்னும் 
சாலை ஓரம் மரம் தன்னாலே நீர் சொட்ட

என்னை தாக்கும் புயலே இரவோடு காயும் வெயிலே 
உன்னாலே உன்னாலே நூலில்லா காத்தாடி ஆனேனே 
அடி பெண்ணே அடி கண்ணே நான் விழுந்தால் 
உன் பாதம் சோ்வேனே

உன் விழிகளிலே ஓஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஓஹோ நான் மாறினேன் கண்ணே

காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி 
மீண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா 
கோபம் கொள்கையிலும் கிரங்க வைக்குதடி 
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா ?
ஆளை கொள்ளும் அழகே நிழல் கூட அழகின் நகலே 

ஒரு நாளும் குறையாத புது போதை கண்ணோரம் தந்தாயே 
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய் நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமா நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய் என்னைத் தாக்கினாய் முன்னே


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...