Friday, August 9, 2024

GENERAL TALKS - கடைசி நம்பிக்கைகளில்தான் வாழ்க்கை நகர்கிறது !


வாழ்க்கை ஒரு உண்மையான அன்பை எத்தனை தொலைவுகள் கடந்தும் சேர்த்துவிடும். இங்கே உலகம் மிகப்பெரியதாக இருக்கலாம் ஆனால் எத்தனை கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் உண்மையான அன்புக்கு எல்லாம் ஒரு தொலைவு என்பதே கிடையாது. வாழ்க்கை என்பது மிகவும் பெரிய விஷயம். ஆனால் உண்மையான அன்பு என்பது நிறைய கற்பனைகள், சந்தோஷங்கள் போன்றவை நிறைந்தது இல்லை, திரைப்படங்கள் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட விடயமாக அன்பை காட்டுகிறது. இந்த உலகத்தில் இருககும் எல்லோரும் திரைப்படங்களில் இருப்பது போல உண்மையான அன்பை வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நிஜ வாழ்க்கையில் நடக்காது. உதாரணமாக நிஜ வாழ்க்கையில் பின்னணி இசை என்று எதுவுமே இருக்காது. ஒரு அன்பு என்பது உண்மையான அன்பு என்றால் கூட நிச்சயமாக வெற்றி அடைந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு தனிப்பட்ட மனித வாழ்க்கையில் வெற்றி அடைய மிகப்பெரிய போராட்டம் உருவாகிறது. ஒரு நல்ல வேலை, ஒரு நல்ல சம்பளம், தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் கிடைத்த பின்னால்தான் இங்கே உண்மையான வாழ்க்கையே தொடங்குகிறது. வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் ஒரு அமைதியான இடத்தில் ஒரு தனிமையான நிலையில் யோசித்து பார்த்தால்தான் புரியும். காரணம் என்னவென்றால் இந்த வெற்றிக்காக அலையும் நேரத்தில் நிறுத்தி நிதானமாக யோசிக்க வேண்டும் என்று ஒரு சிறிய நேரத்தை கூட செலவு செய்ய முடியவில்லை. வேலைக்கு செல்வதும் சம்பாதிப்பதும் விடுமுறை நாட்களில் வீட்டில் நேரத்தை செலவு செய்வதும் மட்டுமே வாழ்க்கை கிடையாது. வாழ்க்கை என்பது ஒரு சுற்றுலா செல்வதிலும் ஒரு மரத்தை நடுவதிலும் ஒரு கப்பல் பயணம் செல்வதிலும் ஒரு புத்தகத்தை எழுதுவதிலும் ஒரு கடினமான போட்டியில் வெற்றி அடைவதிலும் ஒரு சுவையான அறுசுவை உணவை சாப்பிடுவதில் கூட இருக்கிறது. அறிவியல் என்பது அனுபவங்களின் தொகுப்பு என்பதை போல வாழ்க்கை என்பது சேர்த்துவைத்த நினைவுகளில் தொகுப்பாக இருக்கிறது. இந்த வாழ்க்கையில் நிறைய நினைவுகளை சேர்க்க வேண்டும். உண்மையில் நான் சொன்னது போல உண்மையான அன்பு என்று எதுவுமே கிடையாது. ஒரு இடத்தில் அன்பும் இல்லையென்றால் அங்கே நிலவும் ஒரு பொய்யான நடிப்புகளும் பாராட்டுக்களும் அன்பு கொடுப்பது என்று ஆகாது. எப்படி அறிவு என்பது இன்னொருவருக்கு கொடுப்பதன் மூலமாக குறைவது இல்லையோ அதே போல அன்பும் எப்போதும் குறைவது இல்லை.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...