Friday, August 9, 2024

GENERAL TALKS - இந்த வாழ்க்கை கொஞ்சம் பயமுறுத்துகிறது !

 





நிறைய நேரங்களில் உண்மையான அன்பு வெற்றியடைய வேண்டுமென்றால் கடினமான பாதைகளை கடந்து வந்தாக வேண்டும். யாருமே சப்போர்ட் செய்ய மாட்டார்கள் எனும்போது தனிமையில்தான் உண்மையான அன்பை தேடவேண்டியது இருக்கும். அதிகமாக இருக்கும் இந்த தொலைவுகள் இனிவரும் வாழ்க்கையில் சேர்ந்து இருப்போம் என்ற நம்பிக்கையை குறைத்துவிடும். வாழ்க்கை மிகவும் கடினமானது. இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டதே நேசிப்பர்களுக்கு அன்பையும் மரியாதையும் பாதுகாப்பையும் கொடுப்பதற்காகதான். இந்த பிரபஞ்சத்தையும் நட்சத்திரங்களையும் விட மிகப்பெரிய விஷயம் அன்பு.. ஆனால் பிரிவுகளை உண்மையான அன்பினால் தாங்கிக்கொள்ள முடிவது இல்லை. இனிவரும் காலங்களில் பிரிவுகள் இருக்கப்போகிறது. இந்த பிரிவுகள் எப்போதுதான் முடிந்துபோகும்‌ ? , தனிமை எந்த அளவுக்கு மோசமானது என்றும் நேரம் எந்த அளவுக்கு மிகப்பெரிய விஷயம் என்றும் இந்த உலகத்தில் பிரிந்து இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.. ஒரு மிகப்பெரிய யுனிவெர்ஸில் நாம் மிகப்பெரிய தொலைவில் இருக்கிறோம், ஒரு ஒரு நாளும் எனக்கு என்னுடைய வாழ்க்கையில் கடினத்தன்மை அதிகமாகிறது. வாழ்க்கை என்னை பயமுறுத்துகிறது. என்னுடைய நிலையில் வேறு யாராவது இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் உனக்கும் எனக்கும் இருக்ககூடிய இந்த தொலைவு ஒரு ஒரு நொடியும் என்னுடைய மனதை உடைத்துப்போட்டுவிடுகிறது, யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் இந்த உலகத்தில் உயிரோடு இருப்பதே மிகவும் கடினமானது, உண்மைதான் அன்பு வெற்றியடைய வேண்டும் என்றால் கடினமான பாதைகளை கடந்து வந்தாக வேண்டும், இந்த உலகம் மிகவும் பெரியது, ஒருவருடைய நேசத்தை இத்தனை தொலைவுகளுக்குள் பிரித்துவிடுகிறது, ஆனால் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் எதனால் சரியாக நடப்பதில்லை என்று புரியவில்லை. அடுத்த நாள் நெருங்கும்போது கடினத்தன்மை அதிகமாக மாறுகிறது. இனி வரப்போகும் நாட்கள் இன்னமும் கடினமான சம்பவங்களை கொடுக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய சக்திக்கும் அதிகமான விஷயங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடக்கிறது. வாழ்க்கை கடினமான விஷயமாக மாறுகிறது, இன்னமும் கடினமாக மாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது, என்னுடைய அறிவுக்கும் எட்டாத எல்லைகள் இல்லாத பிரச்சனைகள் என்றுதான் முடிவுக்கு வருமோ ?, இந்த உலகத்தை காப்பாற்ற அவெஞ்சர்ஸ் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாமா ? கற்பனை கதைகள் இன்று நிஜத்தில் சாத்தியமாக ஸ்மார்ட்ஃபோன்கள் பார்க்கிறோம், ஆனால் கற்பனை நல்ல விஷயங்களை மட்டும் கொடுப்பதாக இல்லையே, அந்த காலத்தில் மழை பொழியும்போது இந்த உலகத்தில் மிகவும் சிறந்த ஒரு விஷயத்தை காணக்கூடிய ஒரு வகையான சந்தோஷம் கிடைக்கும். அந்த காலத்தில் விலைவாசி உயர்வு இல்லை. உணவு சாப்பிடும்போது நல்ல உணவை சாப்பிடும் மனநிறைவு கிடைக்கும். இது எல்லாமே குறைவான சம்பளம் கிடைக்கும் எல்லோருடைய வீட்டிலும் சகஜமாக நடப்பதுதான், விழாக்கால புத்தாடைகள், காமிராவில் பதிவாகத நெஞ்சில் நிறைந்த நினைவுகள். விடுமுறைக்கால விளையாட்டுக்கள், கவலையற்ற மனநிலை, ஆசைப்பட்ட பொருட்களுக்கு அடம்பிடிப்பது, பிடித்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் போடும்போது அதற்காக சண்டை போடுவது. ரேடியோ நிகழ்ச்சிகளை ரசிப்பது, அதிகாலை கதிரவன் உதயம், மழைக்கு முன்னால் வேகமாக வீசும் குளிர்காற்று. மணல் நிறைந்த பகுதியில் காலை முதல் மாலை வரையில் கிரிக்கெட். நூலகத்தில் புத்தகங்கள் , இதழ்கள் , செய்திகள். அவசர அவசரமான காலை உணவு, நிதானமாக மதிய உணவு, தொலைக்காட்சி செய்திகளுடன் இரவு உணவு. நிறைய பயணங்கள். பயணத்தின் அனுபவங்கள். இது எல்லாமே இன்னமும் ஒரு முறை கிடைக்கவே போராடுகிறேன். இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையே. வெளிச்சம் இல்லாத இருளில் இருந்து வெளியே வருவதற்கு துளியும் வாய்ப்பில்லை. இங்கே முன்னேறவும் விடமாட்டார்கள். பின்னடைவு உருவானால் உதவவும் யாருமில்லை. அனைவரும் சின்ன சின்ன தீவாக மாறிப்போக கட்டாயம் செய்த உலகத்தில் நதியின் அலைகளில் அதன் போக்கில் செல்கிறேன். காலம் இப்போது காதலை மௌனம் ஆக்கிவிட்டது. இருளும் விடியலும் மறுபடியும் மறுபடியும் தோன்றும் காலகட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இன்று உலகம் இருளில் செல்வது போல கற்பனை செய்கிறேன். ஆனால் விடியல் பிரகாசமாக உள்ளது. இந்த விடியல் இருளை தோற்கடிக்க முடியும். அறம் மட்டுமே எப்போதும் வெல்லும். எந்த இருளும் நிலைக்காது. ஒரு விடியல் உருவாகும். வாழ்க்கையில் கடினமான நிலைகள் இருப்பது சகஜமானது. ஆனால் வெற்றி நம்முடையாதாக இருக்க வேண்டும். தோல்வியை தூசி போல தூக்கியெறிந்து வெற்றியை நேரான அம்பு போல அடைய வேண்டும், இந்த நேரான அம்பு அதன் அதிகபட்ச வேகத்தில் பயன்படுத்த வேண்டும், காதல் இருக்கும்வரை இந்த உலகத்தில் மௌனங்களும் இருக்கும். KINDNESS IS EVERYTHING. BE GREATER.

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...