Tuesday, August 6, 2024

GENERAL TALKS - இது கொஞ்சம் பெர்ஸனல் பதிவு !


இந்த உலகத்தை பார்த்தால் எனக்கு அளவுக்கு அதிகமான கோபம்தான் வருகிறது. நான் எந்த நிலைமையில் இருக்க வேண்டியவன் என்று எனக்கு தெரியும் ஆனால் நான் அப்படிப்பட்ட நிலையில் இல்லை. அந்த ஒரு காரணத்தால் உலகம் இவ்வளவு சேதாரம் அடைவதை என்னால் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. நான் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் சரியென்றும் தவறென்றும் எதுவுமே பார்த்தது இல்லை. பாவம் என்றும் புண்ணியம் கூட எதுவுமே பார்த்தது இல்லை. நான் எனக்கு அந்த நொடிக்கு என்ன செயல் செய்ய வேண்டுமோ அந்த செயலை மட்டும்தான் செய்கிறேன். அடிப்படையில் பிரபஞ்சத்துக்கு என்னை பிடிக்காது என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு விதமான மிகப்பெரிய வெற்றிக்கான போராட்டம் எனக்குள் இருக்கிறது. யாராலுமே இமாஜின் பண்ண முடியாத அளவுக்கு நான் இந்த வருடம் முன்னேறி இருக்க வேண்டும் ஆனால் எங்கே தப்பு நடந்தது ? எனக்கு சப்போர்ட் இல்லை. அதுதான் பெரிய தவறு என்று நான் கருதுகிறேன். ஆனால் வேறு வாய்ப்புமே இல்லை. இங்கே அடிப்படையில் இருந்தே நான் பாலைவனத்தில் முளைத்த ஆலமரம் போலத்தான் இருக்கிறேன். நான் உயிரோடு இருக்கும் இந்த ஒவ்வொரு நொடியும் அவ்வளவு வேஸ்ட்டாக போகிறது. இங்கே என்னுடைய மண்டைக்குள் என்னதான் நடக்குது. போதுமான சக்தி என்னிடம் இல்லையா ? நான் எனக்கு எதிராக எது இருந்தாலும் கரைத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறேன். இப்படி நான் பண்ணவில்லை என்றால் எனக்கு எதிராக இப்போது இருக்கும் விஷயம் என்னையே கொன்றுவிடும். நான் இந்த பூமியின் போட்டிகள் நிறைந்த மனித தன்மையற்ற கொலைக்களத்தை வெறுக்கிறேன். எனக்கென்று ஒரு அமைதியான இடம் கிடைத்தால் எல்லாமே நன்றாக இருக்கும் என்றே கருதுகிறேன். ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. என்னுடய விதி என்னும் புத்தகத்தில் என்ன செயல் எந்த நேரத்தில் எழுதப்பட்டு இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும் என்ற கதைகளை நான் நம்பவில்லை. நான் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன் ஆனால் கடவுள் ஒரு இடத்தில் சப்போர்ட் கொடுத்துவிட்டு இன்னொரு இடத்தில் எகைன்ஸ்டாக டார்ச்சர் கொடுக்கிறார். கடவுளும் ஒரு சிபாரிசு வேலையில் வந்த திறமையற்ற மேனேஜர் போல நடந்துகொள்கிறார். அவருடைய வேலையை அவரால் பார்க்க முடிவது இல்லை. அவருடைய சக்திகள் மட்டுமே எனக்கு இருந்தால் என்னால் நிறைய சாதிக்க முடியும் ஆனால் சக்திகள் எல்லாமே சம்மந்தமே இல்லாத இடத்தில்தான் இருக்க வேண்டும் தகுதியான இடத்தில் இருக்க கூடாது என்ற நிபந்தனையை கொடுத்ததுமே கடவுள்தானே ! மற்றபடி இது எல்லாமே புலம்பல்கள்தான். இதுவே தோல்விகளின் கருத்துக்கள். உங்களுக்கு மாற்றம் வேண்டுமென்றால் சொல்லுங்கள் போஸ்ட்டை மாற்றிவிடுகிறேன். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...