Friday, August 9, 2024

GENERAL TALKS - தெளிவற்ற நாட்களாகவே வாழ்க்கை நகர்கிறது ! - 2



அன்பை இப்போது உண்மையான அன்பு என்றும் பொய்யான அன்பு என்றும் பிரித்து வைக்கும் அளவுக்கு உலகம் மாறிவிட்டது. சாதனங்கள் ஸ்மார்ட்டானதாக மாறிவிட்டது, அளவுக்கு அதிகமான விஷயங்களை எல்லோரும் தெரிந்துகொள்ளும் காலகட்டம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த தொலைவு எனக்குள் கடினத்தன்மையை உருவாக்கியுள்ளது. என்னுடைய வாழ்க்கை முடிந்திவிடும். என்னுடைய வாழ்க்கையின் முடிவுதான் உனக்கும் எனக்கும் உள்ள பிரிவாக அமையப்போகிறது. உடல்நிலை சரியில்லாத ஒருவருடைய மனநிலையோ அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த தெருவோரமோ இங்கே நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக உருவாக்கப்பட வேண்டும். திரைப்படமோ தொலைக்காட்சி தொடர்களோ வாழ்க்கை இல்லை. உண்மையான வாழ்க்கையில் உண்மையான அன்பு இருக்கும், இங்கே நடக்கும் சம்பவங்களுக்கு BGM மியூசிக் எல்லாம் இருக்காது. உனக்கும் எனக்கும் இப்போது உள்ள இந்த மிகப்பெரிய தொலைவை கடந்து உன்னை நேசிக்க உன்னை சேர நான் முன்னேறுகிறேன்,  உண்மையாக அன்புக்காக காத்திருப்பது உண்மையிலே மிகவும் சலிப்பு தட்டுகிறது. உன்னோடு நான் சேர்ந்து செல்லும் காலம் எப்போது வரும் என்று என்னுடைய மனது முடிவு இல்லாத காலத்தின் நொடிப்பொழுதுகளை எண்ணிக்கொண்டு இருக்கிறது. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் லைஃப் இஸ் க்ரேட் - இவ்வளவு பெரிய யுனிவெர்ஸ்-ல் ஒரு பங்களிப்பாக இருக்கும் கேலக்ஸியில் சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக இருக்கும் பூமி என்ற பிளானெட்ல் இப்போது உனக்கும் எனக்கும் ஒரு மிகப்பெரிய முடிவு இல்லாத அன்பு. அந்த அன்பின் காரணமான உன்னை சேர நினைத்து நகரங்களை கிராமங்களை ஆறுகளை கட்டிடங்களை கடல்களை கடந்து ஒரு தேடல், இதுதான் உண்மையான காதல் என்று நான் கருதுகிறேன், ஆனால் அன்பு வெற்றியை கொடுக்காது. இந்த உலகம் வெற்றிகளை அடைந்தால் மட்டுமேதான் சப்போர்ட் செய்யும். மேலும் வெற்றிகள்தான் வாழும் காலம் முழுதும் உடல் நலம் மற்றும் மனநலத்தை பாதுகாக்கும். ஆனால் வெற்றிகளை பற்றி எழுதினால் தோல்விகள் இல்லாத வாழ்க்கை எனக்கு கிடைக்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே தோல்விதான். இருந்தாலும் நான் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். உனக்கும் எனக்கும் இந்த மிகப்பெரிய தொலைவை கடந்து வரவேண்டும். கனவுகள் மெய்ப்பட வேண்டும். வாழ்க்கை மொத்தமும் சந்தோஷங்கள் நிறைய வேண்டும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...