Sunday, August 4, 2024

பணமும் மனிதத்தன்மையும் - DONT JUDGE BOOK BY IT'S COVER !

 



ஒரு பெரிய வீட்டில் வசிக்கும் குடும்பத்தை சார்ந்த ஒரு பணக்கார பெண்மணி ஒரு நாள் துணிக்கடைக்கு சென்று அங்கே கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம் என்பதால் எனது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிகவும் குறைவான விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று தேர்ந்தெடுத்து ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார். இவர் ஸ்என்ற சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் பெண்மணி வருகிறார். கடைக்காரரிடம் நான் வேலை பார்க்கும் வீட்டில் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப் போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை கவனமாக தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்கிறார். இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஒரு பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு குடும்பத்தில் இருந்து வந்த அம்மா அவளுடைய எட்டு மாத குழந்தைக்கு பால் வாங்க நேரம் இல்லாமல் போனதால், ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார், இருந்தாலும் அந்த மேலாளர் இந்த பாலுக்கு நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூறவே, பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார். இவ்வாறாக ஒருநாள் வெளியே குழந்தையுடன் வேலை விஷயமாக சென்று வரும்போது ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால், ரோட்டின் ஓரத்தில் இருந்த தேநீர் கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு என்று தேநீர் கடைக்காரரிடம் கேட்க,தேநீர் கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார். ஒருவர் ஏழையாக இருப்பதால் மட்டுமே அவர்கள் பணக்காரர்கள் அளவுக்கு இருக்க முடியாது என்று இல்லை. உண்மையில் பணம் இருப்பவர்கள் ஏழைகளுடைய வாழ்க்கைக்கு அவ்வளவாக முக்கியம் கொடுப்பதே இல்லை என்பதால்தான் நல்ல மனது இருந்தும் ஏழைக்ளின் வாழ்க்கை முன்னேறவிடாமல் தடுக்கப்படுகிறது. பணம் மட்டுமே பெரிது என்று மனித தன்மையை பார்க்காமல் இருக்க கூடாது. இங்கே மனித தன்மை இருந்தாலே உலகத்தின் மொத்த பிரச்சனைகளும் சரியாகிவிடும். - படித்ததில் பிடித்தது !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...