Friday, August 9, 2024

GENERAL TALKS - தனிப்பட்ட வாழ்க்கையின் கடினத்தன்மை தாங்கமுடியவில்லை !

 




என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது . இந்த உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் இருந்து இந்த வலைப்பூவை படித்துக்கொண்டு இருப்பாய் என்று நம்புகிறன். எல்லைகள் இல்லாததுதான் இந்த அன்பு. என்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் இன்னமும் என்னுடைய வாழ்க்கையை கடினமாக மாற்றுகிறது. இந்த உலகத்தில் ஒரு ஒரு சிறிய அடிப்படையான விஷயத்துக்கும் இப்போது நான் கஷ்டப்படுகிறேன். என்னால் முடியவில்லை என்று சோர்ந்து போக முடியாது. இதுதான் என்னுடைய வேலை. நான் செய்தே ஆகவேண்டும் என்று கடினமான சம்பவங்களை கடந்து செல்கிறேன். இந்த உலகத்தில் என்னுடைய நேசம் வெற்றி அடையப்போவது இல்லை என்று எனக்கு புரிந்துவிட்டது. வாழ்க்கை எந்த ஒரு நொடியும் மாறிவிடும். எதுவுமே நிரந்தரம் இல்லை என்னை தவிர. இந்த உலகத்தில் இருக்கும் பிரச்சனையே வாழ்நாளின் மொத்தமான நூறு வருடங்களையும் செலவு செய்தாலும் முடிக்க முடியாத பிரச்சனைகளை கொடுத்து வெறும் மூன்று மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கட்டளையிடுவதுதான். யாராவது ஒருவர் வெற்றி அடைந்தால் இன்னொருவரையும் வெற்றியடைய வேண்டும் என்று போராட சொல்வது எவ்வளவு கடினமான விஷயம். என்னுடைய அடுத்தடுத்த தோல்விகளுக்கும் வேதனைகளுக்கும் உன்னுடைய பிரிவுதான் காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் நான் அவ்வளவு கடினமான வலிகளை தாங்கிக்கொள்கிறேன், வெற்றி அடைய 0.00 சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் தோல்விதான் கிடைக்கும் என்று எனக்கு தெரிந்தும் அடுத்த நாளை வாழ்ந்து பார்க்கிறேன். பணம் இல்லாத நாட்கள் போர் நடக்கும் நாட்கள் போன்று அவ்வளவு கடினமாக இருக்கிறது, வெற்றி வாய்ப்பு பூச்சியம் என்றும் அடுத்த நாள் இந்த நாளை விட மோசமானதாக இருக்கபோகிறது என்றும் நன்றாக புரிகிறது. ஆனால் எனக்கு வேறு ஆப்ஷன் இருப்பதாக தெரியவில்லை. ஒரு கனவு எனக்குள் இருந்தது. ஒரு முடிவில்லாத மழைக்காலம். ஒரு பாதுகாப்பான வீடு. ஒரு நிறைவான வாழ்க்கை. இதுவும் ஒரு நிறைவேறாத கனவாக மனம் என்னும் மோசமான நினைவுத்திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க்ல் ஸ்டோர் செய்யப்படுகிறது. இந்த விஷயம் பிரபஞ்சத்தின் சக்தியாளரை எதிர்ப்பதாக இருந்தாலும் கடைசியில் நான்தான் ஜெயித்து ஆகவேண்டும் !


No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...