வாடாமல்லிக்காரி என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி என்னை நனைச்சாயே மும்மாரி
புரட்டி போட்ட ஆமைய போல மனசு கிடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா உசுரு நழுவுதடி
என் உசுரே என் உசுரே என் மனசை பறிக்காதே
மனசே என் மனசே என் வயசை முறிக்காதே
என் உசுரே என் உசுரே என் மனசை மதிக்காதே
மனசே என் மனசே என் வயசை கடிக்காதே
உன்ன ஏன்டா பாத்தேன் நான் நேத்துதான்டா பூத்தேன் நான்
தாவணிக்குள் முளைச்சேன் நான் தாவி குதிச்சேன் நான்
வெட்க காடா ஆனேன் நான் வெட்கம் கேட்டு போனேன் நான்
கோழி குஞ்சா ஆனேன் நான் கூவ மறந்தேன் நான்
தொரட்டி போட்டு இழுக்குற என்னை குண்டு கண்ணை என்னடி பண்ண ?
ஐயோ ஐயோ என்னை கொல்லாதே !
விளைஞ்சு நிக்கும் வெத்தலை கொடியா மென்னு பாக்க இழுக்குற சரியா ?
கொலைகாரி சொல்லேன்டி பொய் மட்டும் சொல்லாதே
உசுரே என் உசுரே என் மனசை பறிக்காதே
மனசே என் மனசே என் வயசை முறிக்காதே
உசுரே என் உசுரே என் மனசை மதிக்காதே
மனசே என் மனசே என் வயசை கடிக்காதே
காஞ்சு கெடந்த செங்காடு கன்னம் பட்டு பூத்தாச்சு
நெஞ்சு பாக்க வரியா நீ ஏலே களவாணி
வீடு முழுக்க உன் வாசம் விரட்டி விரட்டி கதை பேசும்
வெளிய சொன்னா சங்கோஜம் ! என்ன சவகாசம்
உள்ளுக்குள்ள உன்ன நினைச்சா உச்சம் தலையில் கொம்பு முளைக்கும்
ஏனோ ஏனோ விடையும் தெரியாதே
ஈர காட்ட உழுவது போல புரட்டி போட்ட என்னையும் மெல்ல
தடை சொல்ல முடியாம தலையாட்டி நின்னேனே
என் உசுரே என் உசுரே என்னை உசுப்பி கெடுக்காதே
மனசே என் மனசே என்னை அடிச்சு துவைக்காதே
வாடாமல்லிக்காரி என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி என்னை நனைச்சாயே மும்மாரி
புரட்டி போட்ட ஆமைய போல மனசு கிடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா உசுரு நழுவுதடி
என் உசுரே என் உசுரே என் மனசை பறிக்காதே
மனசே என் மனசே என் வயசை முறிக்காதே
என் உசுரே என் உசுரே என் மனசை மதிக்காதே
மனசே என் மனசே என் வயசை கடிக்காதே
No comments:
Post a Comment