Friday, August 2, 2024

MUSIC TALKS - INDHA SIRIPPINAI ENGU PAARTHEN MINNAL THERITHATHU ADHIL PAARTHTHEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன் ? மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை எங்கு பார்த்தேன் ? உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்
இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன் ? மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை எங்கு பார்த்தேன் ? உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்

காலை மஞ்சள் வெயில் பார்த்தேன் 
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன் 
காதல் என்ன நிறம் பார்த்தேன்
பார்வைக்கு ஓர் பார்வை எதிர்ப்பார்க்கிறேன்
வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்
கசங்கிய தலையணை பார்த்தேன்
இளமையின் பசியை பார்த்தேன்
அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ 
நிலவே என்னை கொண்டாடு 

இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன் ? மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை எங்கு பார்த்தேன் ? உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்

மழையில் வானவில்லை பார்த்தேன் 
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்
சாரல் சிந்துவதை பார்த்தேன் 
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்
தேன் ஊறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்
கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்
புல்வெளி மீதில் தூங்கும் பனியினை தினமும் பார்த்தேன்
மொழியினில் சொல்லிட வார்த்தைகள் இல்லாமல் போனதே !
அன்பே பார்த்தேன் காதல் தான் ஆனந்தம்

இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன் ? மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை எங்கு பார்த்தேன் ? உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...