Tuesday, August 6, 2024

GENERAL TALKS - இன்னும் கொஞ்சம் பேசலாம் இந்த பிரிவை பற்றி !


இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து துன்பங்களை விடவும் ஒரு கொடிய துன்பம் நேசித்த உள்ளத்தின் பிரிவு என்று இன்றுதான் அறிந்துகொண்டேன். வாழ்க்கைக்கும் எனக்கும் இருக்கும் இருந்த சொற்பமான சில தொடர்புகளும் இணைப்புகளும் முறிந்துபோக தோல்விகளே வாழ்க்கையில் நிலையென நினைக்கிறேன். இந்த உலகத்தின் எல்லா பூக்களும் நமக்காகவே மலர்ந்தது என்றும் இந்த உலகத்தின் கடல் கடந்த அனைத்து நாடுகளும் நம்முடைய வருகைக்காக காத்திருக்கிறது என்றும் நினைத்தேன். ஆனால் கடந்த காலமும் நிகழ்காலமும் இந்த அளவுக்கு நம்மை பிரித்துவிடும் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. அன்பு மட்டுமே உலகத்தில் நிரந்தரம் என்றால் வாழ்க்கை ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். பிரிவுகள் கொடுக்கும் வலிகளும் இழப்புகள் கொடுக்கும் துன்பங்களும் என்று என்னுடைய வாழ்க்கையை விட்டு செல்லும் என்று காத்திருக்கிறேன். வானம் கூட தொலைவு இல்லை என்று எல்லைகள் இல்லாமல் யோசித்த மனது இன்று உனக்கும் எனக்கும் உள்ள தொலைவை கண்டு சோர்ந்துபோகிறது. கதைகளை போல வாழ்க்கை இருந்தால் கடைசியில் வெற்றியடைவோம்‌. ஆனால் கதைகள்தான் நிஜக்காதலின் முன்னால் எப்போதும் தோற்றுப்போகிறதே.. உண்மையான காதலின் முன்னால் பொய்களும் கற்பனைகளும் எத்தனை நாட்கள் நிலைக்கும் ? இந்த பூமியே உண்மையான அன்பின் காரணத்தால்தான் ஒரு ஒரு நொடியும் நகர்ந்துகொண்டு இருக்கிறது. ஒரு நாள் அன்பு ஒரு ஒரு நாளும் நிலைக்காது. கடைசிவரையில் நிலைக்கும் ஒரு அன்பை தேடி செல்லும் பயணமாக வாழ்க்கை இங்கே ஒரு ஒரு மனிதனையும் சோதிக்கிறது. நாட்கள் கடந்து செல்ல செல்ல காலம் நமக்குள் இருக்கும் தொலைவை அதிகப்படுத்திக்கொண்டே செல்வதாக மனதுக்குள் தோன்றுகிறது. உன்னுடைய காலடித்தடங்களை தேடி செல்லும் தேடலில் என்னுடைய காலடித்தடங்கள் பயணிக்கிறது. உனக்கும் எனக்கும் இருக்கக்கூடிய தொலைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக துன்பத்தை அதிகப்படுத்துகிறது. வாழ்க்கை சிறியதாக இருந்தாலும் அன்பு என்பது மிகவும் பெரிய விஷயம். அன்பு இந்த உலகத்தில் எல்லோருக்கும் பொதுவான ஒரு தனிப்பட்ட விஷயம். அன்பு என்பது இந்த உலகத்தின் சமநிலை . அன்பு என்றைக்குமே குறையாது. அன்பு என்பது மறைக்கப்படலாம் ஆனால் மாற்றப்பட முடியாதது. இந்த பிரிவு கொடுக்கும் மனநிலையை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. இந்த வாழ்க்கையில் மனம் எப்போதுமே ஒரு சில விஷயங்கள் மாற்ற முடியாதது என்று தெரிந்தும் மாற்றத்தை உருவாக்க போராடுகிறது.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...