Friday, August 9, 2024

GENERAL TALKS - காதலின் வேல்யூ மிகவும் அதிகமானது !


காதல் என்பது ரொம்பவே அரிதான விஷயம். அது என்னைக்குமே இலாப நோக்கமற்ற விஷயம். திரைப்படக் காதல் அல்லது புத்தகங்களில் இருக்கும் காதல் என்ற பெயரில் எல்லாமே சரியான விஷயம் என்று சொல்ல முடியாது. ஒரு உண்மையான அன்புக்கு. இன்னொருவர் நலமாக இருக்க வேண்டும் என்று மனது சொல்லக்கூடிய ஒரு இனம் புரியாத நேசத்துக்கு அவ்வளவு சுலபமாக இதுதான் என்று வகைப்படுத்த முடியாது. இந்த உலகத்தில் சூரியனை பார்க்கிறோம் இந்த பிரபஞ்சத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறது. சூரியன் மட்டும்தான் மற்ற எல்லாமே நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா ? ஒரு ஒரு தனிபட்ட மனிதருக்கும் அன்பை வெளிப்படுத்தும் முறை மாறுபட்டதாக இருக்கும். என்னை பொறுத்தவரைக்கும் இதுதான் அன்பு என்று என்னாலும் சரியாக சொல்ல முடியாது. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து இடங்களையும் நேசிப்பவரோடு சென்று பார்க்க தோன்றும். நிறைய நிழற்படங்கள் காணொளிகள் எடுத்துக்கொள்ள தொன்றும். நிறைய நினைவுகளை சேர்த்துக்கொள்ள தோன்றும். அன்பு எப்போதுமே அதிகபட்சமாகவே இருக்கும். உடல் நிலை சரியில்லாதபோது அருகில் இருக்க தோன்றும். உண்மையில் நிறைய விஷயங்கள் பேச தோன்றும். ஆனால் அனைத்து விஷயங்களும் பேசும்போது அது அனைத்தும் நேசிப்பவருக்கும் நமக்கும் மட்டும் கேட்க வேண்டும் என்று தோன்றும். காதல் பாடல்களை கேட்கும்போது அந்த பாடல்களில் இருக்கும் ஒரு புதினமான நிகழ்தகவில் வாழவே தோன்றும். இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் இருந்தாலும் முடிந்தால் மரணமே இல்லாமல் வாழ்ந்துவிட தோன்றும். வாழ்க்கை ஒரு மாயாஜாலாமாக இருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு அறிவியல் புதினமாக இருக்க வேண்டும். இந்த உலகத்தில் எல்லோரும் நல்லவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நிறைய கற்பனையிலும் நடக்காத விஷயங்கள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள தோன்றும். மனம் கடினமான ஒரு பகுதியில் இந்த உண்மை அன்பை யாரும் ஒரு கீறல் கூட நிகழத்திவிடாத அளவுக்கு பாதுகாக்கும். அன்பு அதிகமாவதால் அறிவுப்பூர்வமான விஷயங்கள் யோசிக்கவே நேரம் இருக்காது. நேசிப்பவரின் நலனை தவிர வேண்டிக்கொள்ளும் பெரிய விஷயங்கள் எதுவுமே இருக்காது. ஒரு மாயாஜாலாமான சக்தி கேட்கும் அனைத்து விஷயங்களையும் கொடுத்துவிடும் என்று நம்புவோம். வாழ்க்கை மிகவும் பெரியது என்று நினைப்போம். ஒரு ஒரு நாளும் புதியதாக தோன்றவே அடுத்த நாளுக்கான கியுரியாசிட்டியில் தூக்கமே வராது. வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் அதன் தீர்வுகளை கூட யோசிக்கவே விடாது இந்த அன்பினால் உருவான எண்ணங்கள். முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை உடல் நலனும் மன நிறைவும் கிடைக்க வேண்டும். ஒரு கோடி எண்களில் இருந்து ஒரு உண்மையான எண் இதுதான் என்று சொல்லிவிட்டு மற்றவை பொய்யென சொல்ல முடியாது. அதே போல காதல் என்றாலே உண்மைதான். பொய்யான காதல் என்று எதுவுமே இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அது காதல் இல்லை என்று சொல்லலாம். இது எல்லாமே ஆசைகள்தான். இந்த ஆசைகள் நிறைவேறாமல் போகத்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் நிறைவேற வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...