இந்த காதலில் தொலைவுகள் எதனால் இந்த அளவுக்கு வலிகளை கொடுக்கிறது என்று தெரியவில்லை. காலம் வெற்றி என்றால் என்னவென்றே தெரியாத மனதை எதுவுமே செய்வது இல்லை. ஆனால் வெற்றியின் அருமை தெரிந்த மனிதனுக்கு வெற்றி கிடைப்பதே இல்லை. அதிகப்படியான மனதின் சோர்வு காதலில் தடுக்கமுடியாத வேதனையை கொடுக்கிறது. வாழ்க்கை நம்மை விட்டு சென்றுகொண்டே இருக்கிறது. காலம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் போகிறது. உன்னுடைய நலத்தை மட்டுமே நான் விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கையின் உண்மையான நேசத்தை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்த பிரிவுக்காக நான் மன்னிப்பு கேட்பதை தவிர வேறு எதுவுமே செய்ய முடியாது.வாழ்க்கையில் பிரிந்து இருக்கும்போதுதான் காதலுடைய வலி அதிகமாக இருக்கும். காதல் இருக்கும்போது இந்த உலகமே நம்முடைய உள்ளங்கைகளுக்குள் இருப்பதாக ஒரு சுதந்திரமான மனநிலை உருவாகும். மனதுக்குள் இருக்கும் அந்த உண்மையான அன்பும் அதிகமான வலிமையும் காதல் என்ற ஒரு விஷயம் மட்டுமே கொடுக்கும். வாழ்க்கையில் அன்பு நிலையானது இல்லை. இன்றைக்கு நேசிப்பவர்கள் நாளை வெறுத்து விட்டுச்சென்றுவிடுவார்கள் என்ற என்னமே மனதுக்குள் இருக்கும். இந்த வாழ்க்கை மனதுக்குள் ஒரு சலிப்பை உருவாக்கும். இந்த உலகத்தில் உண்மையான அன்பு என்று எதுவும் இல்லையா ? என்ற மனதின் வலி மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் கடைசியில் காதல் மட்டுமே வெற்றியை அடையும். உண்மையாக நேசிப்பவர்களுக்காக எத்தனை வலிகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் காயங்களையும் பொறுத்துக்கொள்ள முடியும். காதல் என்பது கற்பனை இல்லை, மாயாஜாலம் இல்லை, சந்தோஷம் இல்லை. காதல் என்பது காலங்களை கடந்த இணைப்பு. ஒரு மரணம் இல்லாத நினைவுகளின் களஞ்சியம்.இதுதான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். இதுக்காகத்தான் எல்லோரும் போராடுகிறார்கள். நானும் ஆசைப்படுகிறேன். கனவை நினைவாக என்னுடைய போராட்டத்தை மேற்கொள்கிறேன்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்
சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும். தரமான கல்வி, மக்கள் தன்னம...
-
இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
No comments:
Post a Comment