Friday, August 9, 2024

GENERAL TALKS - பேரசைகளுக்கு எல்லையே இல்லை !


என்னுடைய வாழ்க்கை எதனால் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்று தெரியவில்லை. உனக்கும் எனக்கும் இப்போது உள்ள தொலைவு என்னை பயமுறுத்துகிறது.. இன்னும் வரப்போகும் நாட்களிலும் இந்த தொலைவு இப்படித்தான் இருக்குமா ? என்னுடைய உண்மையான அன்பு எப்போது உன்னையும் என்னையும் சேர்த்துவைக்கும்..- இனம் புரியாத ஒருவித நம்பிக்கையில்தான் காத்திருக்கிறேன்.. இனி வரும் காலங்களில்‌ நிறைய கடினமான விஷயங்களை கடந்து வரவேண்டும்.. ஆனால் நீ புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நான் உன்னை நிறைய நேசிக்கிறேன்.. உன்னிடமும் என்னிடமும் காலம் நிறைய மாற்றங்களை கொண்டுவரலாம்.. ஆனால் என்னுடய நேசம் என்னை விட்டு போகாது.. இந்த உலகத்தில் வாழும் நாட்கள் கொஞ்சம்தான்.. வெறுப்பு நாட்களை அதிகப்படுத்தப்போகிறதா ? என்ன..? அதனால்தான் உன் மீது நான் கொண்ட நேசம் கடைசிவரையில் இருக்கவேண்டும் என்று பேராசைப்படுகிறேன்.. ஒரு முடிவில்லாத பயணத்தை தொடங்குவோம்.. இந்த பயணத்தில் அன்பு மட்டும்தான் எல்லாமே..  இந்த உலகத்தில் மாற்றங்களை எதிர்பார்க்காமல் அன்பு கொடுப்பது என்பது பூமியில் இருந்து ஏலியன் UFO களை பார்க்கும் அளவுக்கு அவ்வளவு அரிதான விஷயமாகும். ஆனால் உண்மையான காதல் கடைசி வரைக்கும் நம்முடன் இருக்கும். உண்மையாக நேசிக்கும்போது அப்படி நேசிப்பவர்களை காப்பாற்றக்கூடிய பொறுப்பும் அதிகமாகிறது. வாழ்க்கையில் கடைசிவரைக்கும் நாம் நேசிக்கக்கூடிய அந்த அன்பு நம்முடனே இருக்கவேண்டும் என்று நம்புகிறோம்‌. காலங்களை கடந்து வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அப்படி ஒரு உண்மையான அன்பு இருக்கும் என்றால் அந்த அன்புக்காக நாம் நம்முடைய மனதுக்குள் மாற்றங்களை உருவாக்கலாம். கனவுகளும் கற்பனைகளும் என்றைக்குமே வாழ்க்கை இல்லை. அவைகள் வாழ்க்கையாக இருந்ததும் இல்லை‌. இந்த உலகத்தில் ஆசைகள் நீங்கினால் துன்பங்களும் நீங்கிவிடும். செல்வம் அதிகமாக சேர்ந்தால் வெற்றி என்பது நிச்சயமாக கிடைத்துவிடும். வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது, மிகவும் மோசமானது. ஆனால் உன்மையான அன்புக்காகவே வாழ்க்கை என்ற மிகப்பெரிய போராட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த உலகமே மிகவும் அதிசயமானது.. இந்த பிரபஞ்சத்தில் எத்தனை நட்சத்திரங்களும் எத்தனை கிரகங்களும் இருந்தாலும் இன்று இந்த ஒரு நாள் இந்த பூமியின் வாழ்க்கையில் பூமியில் ஸ்மாரட்போனில் டைப் செய்து வலைப்பூவில் பதிவு செய்கிறோம். இந்த உலகம் என்பது THE GREATEST MAGIC OF ALL TIME.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...