Saturday, August 10, 2024

GENERAL TALKS - இனம் புரியாத ஒரு மாயாஜால வலை இருக்கிறது


இந்த உலகத்தில் உண்மையான அன்பு எப்போதுமே எளிதாக கிடைப்பது இல்லை. அப்படியே உண்மையான அன்பு கிடைத்தாலும் நிலைப்பது இல்லை. வாழ்க்கை மிகவும் மாயாஜாலமானது. இங்கே எல்லாமே செய்ய முடியும். செய்ய முடியாத விஷயம் என்று எதுவுமே இல்லை. ஒரு ஒரு முறையும் எனக்கு கிடைக்கும் இந்த மோசமான தனிமையின் அனுபவம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் முழுமையாக  உடைத்துப்போட்டு விடுகிறது. வாழ்க்கையில் என்னால் சாதிக்க முடியவில்லை. ஒரு ஒரு முறையும் வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள் பாடல் கேட்கும்போது இந்த உலகத்தின் எல்லைகளை கடந்தது பயணிக்க மனது சொல்கிறது. இந்த உலகத்தின் எந்த ஒரு வெற்றியை அடையமுடியாமல் தோல்வி அடைந்தாலும் அதன் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது என்பது மட்டும்தான் என்னுடைய தேடல்களுக்கு பதிலாக கிடைக்கிறது. விலைவாசி உயரும்போது வாழ்க்கை மிகவும் கடினமாக மாறுகிறது. அடுத்தடுத்த நாட்களை என்னால் சமாளிக்க முடிவதே இல்லை. ஒரு இனம் புரியாத மாயவலை இருக்கிறது. நான் தொடும்போது அது எனக்கு வலியை கொடுத்து கடைசிவரையில் எல்லைகளை கடந்து செல்ல முடியாமல் பார்த்துக்கொள்கிறது. பொதுவாக அறிவியலால் உருவாக்கப்பட்ட உடைக்க முடியாத இந்த மாயவலையை அதிர்ஷ்டம் இல்லாமை என்று சொல்ல முடியாது. உண்மையில் எனக்கு அதிர்ஷ்டம் என்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லை. இங்கே எல்லா விஷயங்களுக்கும் பின்னால் அறிவியல் பின்னணி உள்ளதே தவிர்த்து அதிர்ஷ்டம் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை. ஒரு முறை விழுந்தால் மறுமுறை எழுந்து நடக்க முடியாது என்னும் அளவுக்கு ஒரு ஒரு வலிகளும் என்னை தாக்குகிறது. ஆனால் என்னால் ஒரு காரணத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது. கடந்த காலம். கடந்த காலம் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது என்னால் முடியாது என்று விட்டுச்சென்றுவிட்டால் கடைசியில் இவ்வளவு வருடங்கள் என்னுடைய செயல்கள் அனைத்தும் பயனற்ற விஷயங்களாக மாறிவிடும், உன்னை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது, என்னுடைய அன்பு உண்மையானதுதான், என்னுடைய அன்பு கண்டிப்பாக வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் என்று நம்புகிறேன். இந்த எண்ணங்களால் நான் விட்டுக்கொடுக்காமல் உனக்காக போராடுகிறேன் ! இதுவும் பெர்ஸனல் பதிவுதான் எல்லோருக்கும் புரியவேண்டும் என்று அவசியம் இல்லை !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...