BLACKBERRY 2023 - சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இந்த படம் பற்றி கண்டிப்பாக பேசியே ஆகியவேண்டும். BLACK BERRY . உங்களுக்கு ஒரு காலம் நினைவில் இருக்கிறதா ? மிக மிக பணக்கார மனிதர்களால் மட்டும்தான் பிளாக் பெர்ரி ஃபோன்களை வைத்து இருக்க முடியும். அவ்வளவு விலை அதிகமான ஃபோன் தயாரிக்கும் நிறுவனம் நஷ்டம் வந்து மார்க்கெட்டில் இருந்து வெளிநடப்பு செய்ய காரணம் என்ன ? இந்த படம் ஒரு சிம்பிள் ஆன இருந்தாலும் ரொம்பவுமே இம்பார்டண்ட் ஆன பயோகிராபி படம்.
ஒரு சிறிய லெவல் அமெரிக்க டெக் நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் , ஒரு பெரிய கம்பெனிக்கு டெக்ஸ்ட் வகையில் மெசேஜ் அனுப்பவும் பெறவும் ஒரு ஃபோன் போன்ற டிவைஸ் கொண்டுவந்து ப்ரெசெண்டேஷன் கொடுக்கிறார்கள். பிரசன்டேஷன் சொதப்பலோ சொதப்பல். டெக்னாலஜி பற்றி அதிகமாக தெரியாத ஆனால் வியாபாரத்தில் மிகவும் சிறப்பான ஆட்டிட்யூட் இருக்கக்கூடிய கோபக்கார பிசினஸ் மேன் "ஜிம் பஸிலே" இந்த கம்பெனியில் இன்வெஸ்ட் பண்ணுவாதாக நினைத்துக்கொண்டு 1.6 மில்லியன் கடனில் இருக்கும் கம்பெனி அக்கவுண்ட்க்கு 1.2 மில்லியன் என்ற தன்னுயடைய வாழ்நாள் சேமிப்புகளை அனுப்பி வைக்கிறார். கடன் இருப்பதால் பாங்க் மொத்த பணத்தையும் எடுத்துககொள்கிறது. நடப்பு CEO "மைக் லாசர்டிஸ்" எப்போதுமே டெக்னோலஜியில் ஆர்வம் இருக்கும் மனிதராக இருந்து இருக்கிறாரே தவிர வியாபாரத்தின் இலாப நஷ்டங்களை பற்றி கண்டுகொள்வதே இல்லை. மேலும் வெறும் 10 பணியாளர்கள்தான் கம்பெனியில் இருக்கிறார்கள். இப்போது கம்பெனியை பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதை தவிர துணை CEO "ஜிம் பஸிலே"வுக்கு வேறு வழியே இல்லை. அடுத்த 5 வருடங்களுக்கு மிகவும் கஷ்டப்பட்டு மிகவும் அலைந்து மேலும் நிறைய நிறுவனங்களை சந்தித்து அங்கே இருப்பவர்களிடம் பேசி ஒரு சாதராணமான எதற்கும் தேறாத நிறுவனத்தை 18000 பணியாளர்கள் இணைந்து வேலை பார்க்கும் உலக அளவிலான டெக்னோலஜி சாம்ராஜ்யமாக அவருடைய வியாபார நுணுக்கங்களால் மாற்றுகிறார். கடைசியாக ஷேர் மார்க்கெட்டில் 45 சதவீதம் ஸ்மார்ட்ஃபோன் சேல்ஸ் விற்பனையுடன் நம்பர் ஒன் என்ற இடத்தில் இருந்த பிளாக்பெர்ரி எப்படி வியாபாரத்தில் இருந்து பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ? ஆப்பிள் vs. பிளாக்பெர்ரி என்ற தொழில் போட்டியில் நிஜமாகவே நடந்தது என்ன ? என்று நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறது இந்த படம் !
தேவையற்ற காட்சிகள் , சென்ட்டிமென்ட் , உலகத்தரமான விசுவல் எஃபக்ட்ஸ் என்று படத்துக்கு தேவையற்ற விஷயங்கள் எதுவுமே இல்லாமல் இந்த படத்தில் கதைக்கு தேவையான காட்சிகள் மட்டுமே இருக்கிறது, கிட்டத்தட்ட 10 வருடங்களின் கதையை மிகவும் குறைவாக இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான ரன்னிங் லெந்த் இருக்கும் இந்த படத்தில் இயக்குனர் சொல்லிவிட்டார். கதையின் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களை நடிகர்கள் ஜெய் பியூரிச்சல் மற்றும் கிளென் ஹாவேர்ட்டன் மிகவும் சிறப்பான முறையில் நடித்துக்கொடுத்துள்ளனர், மொத்தத்தில் தரமான ஒரு ஃபினான்ஷியல் பயோகிராபி திரைப்படம்.
No comments:
Post a Comment