இதற்கு முந்தைய போஸ்ட்களில் எல்லாமே நான் நிறையவே எழுதியுள்ளேன் ஆனால் அவைகளை எழுதவும் நான் எழுதியது சரிதானா என்று புரிந்துகொள்ளவும் எனக்கு நிறைய விஷயங்கள் படிக்கவேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இதே வலைப்பூவில் கடைசி 2 போஸ்ட்களை படிக்கவும். அது நான் AI மூலமாக சேகரித்த பதில்களை போஸ்ட்டாக போட்டிருந்தேன் ஆனால் எனக்கு ஒரு நாள் முழுக்க வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் 20 நிமிடங்களில் 2 தரமான போஸ்ட்களை போட்டுவிட்டேன். ஆனால் இதுவரைக்கும் நான் வலைப்பூவில் பதிவு பண்ணியது எல்லாம் குப்பை போல தோன்றுகிறது.
இந்த உலகத்தில் என்னதான் நடக்கிறது ! இந்த போஸ்ட் நான் பதிவிடும் இந்த நொடியில் ஹாலிவுட் படங்களின் துறையில் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம் சென்றுக்கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த கணினி டப்பாக்கள் மனிதர்களை போலவே இப்போது கதைகளையும் எழுதி கொடுக்கிறது. இதுதான் சோகமான விஷயம். கதைகளை எழுதுவதற்க்கு சம்பளம் இதுவரை குறைவாகத்தான் கொடுக்கப்பட்டது. கதைகளை எழுதுதல் மனிதர்களால் மட்டுமே பண்ண முடிந்த ஒன்று ! இப்போது அதுக்கும் மெஷின் இருக்கிறது என்றால் இது நியாயமா ?
இந்த கம்ப்யூட்டர் டப்பாக்களுக்கு வெறும் ஒரு யூனிட் கரண்ட் கொடுத்தால் போதுமானது. ஆனால் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம், குடும்பம் மற்றும் நண்பர்கள் என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது.
உடல் உழைப்பை விட அறிவை பயன்படுத்தி சம்பாதிப்பது மேலானது என்று டெக்னாலஜியின் வளர்ச்சி அதிகமாக இருந்த காலகட்டத்தில் சொல்லிக்கொண்டு இருந்தோம்.
ஆனால் இப்போது அறிவையே பயன்படுத்த ஒரு டெக்ஸ்ட் மெஷின் வந்துவிட்டது, கற்பனையில் ஓவியங்கள் வரையும் மெஷினும் வந்துவிடுமாம் ! இதனால் எனக்கு மனதுக்கு கஷ்டமாக உள்ளது. இந்த வலைப்பூவில் இனிமேல் என்னுடைய கனவுகளைத்தான் எழுதவேண்டும்.
வருங்காலத்தில் மெஷின்களுக்கும் கண்கள் , காதுகள் , மூளை இருந்து தூக்கத்தில் கனவுகள் காணும் விஷயங்கள் நடக்கலாம் போல..! வாழ்க்கை செல்லும் போக்கை பார்த்தால் மெஷின்கள் இனிமேல் மனிதர்களை போல பிறந்து வளர்ந்து படித்து வேலைக்கு சென்று திருமணம் பண்ணிக்கொண்டு ஆதார் கார்ட் , ரேஷன் கார்ட் . வங்கிக்கணக்கு எல்லாம் வாங்கிக்கொண்டு பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி பின்னால் ரேஷன் கடையில் கியூவில் நின்றுகொண்டு பொருட்கள் வாங்க காத்துக்கொண்டு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு இயந்திரத்துக்கு இவ்வளவு சக்தியை கொடுக்க கூடாது, மெஷின்கள் வெறும் மெஷின்கள் என்றே இருக்க வேண்டும்.மாட்ரிக்ஸ் படம் போலவோ இல்லையென்றால் டெர்மினேட்டர் படம் போலவோ வாழ்க்கையை மாற்ற வேண்டாம்.
No comments:
Post a Comment