இந்த வலைப்பூவில் கடைசியாக நான் ஒரு அனிமேஷன் சீரிஸ்க்கு விமர்சனம் கொடுத்தது தி லாஸ்ட் ஏர் பென்டர் என்ற அனிமேஷன் சீரியல்க்குதான். இந்த அனிமேஷன் சீரிஸ் தனித்து ஒரு ஸ்டோரி ஆர்க் கொடுத்தது. இதுக்கு அடுத்ததாக நான் பார்த்த அனிமேஷன் சீரிஸ்களில் எனக்கு ரொம்பவுமே பிடித்த இந்த சீரிஸ்தான் நாருட்டோ. இந்த அனிமேஷன் சீரிஸ்ஸின் கதை, நிஞ்சா தற்காப்பு கலைகள் மற்றும் சண்டை பயிற்சிகளை காலகாலமாக பயன்படுத்தி பாதுகாப்புகளை கொடுக்கும் நாடுகள். இந்த வகையில் ஹிட்டன் லீஃப் வில்லேஜ் என்ற நாட்டின் ஒரு பகுதியில் பிறக்கும் பையன்தான் நருட்டோ உசுமாக்கி , அப்பா அம்மா இல்லாத பையன் என்பதால் இந்த பையன் சந்திக்கும் கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இந்த உலகத்தில் அவனுக்கு என்று நிறைய மரியாதை கிடைக்க வேண்டும் என்று தனியொரு மனிதனாக போராடுகிறான். இவனுடைய வாழ்க்கையில் அப்பா அம்மா இல்லாமல் இருப்பதால் தனியாக வாழும் சோகம் என்று இல்லாமல் இன்னொரு சோதனை என்னவென்றால் நயன் டெய்ல் பாக்ஸ் எனப்படும் ஒன்பது வால்கள் கொண்ட கொடிய அரக்க சக்திகள் கொண்ட உயிரினத்தை இவனுக்குள் பிறந்தத்தில் இருந்தே அடைத்து வைத்து இருப்பதால் அந்த வில்லேஜ் மக்கள் யாருமே இவனோடு பேசுவதற்கே பயப்படுகிறார்கள். கடைசியாக அகாடமி படிப்புகள் முடிந்ததும் நின்ஜா கலைகள் மற்றும் சண்டை பயிற்சியை கற்றுக்கொண்டு ஒரு பாதுகாப்பு நின்ஜாவாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்குகிறார். ககாஷி சென்ஸே என்ற மிக திறமை வாய்ந்த ஆசிரியரால் நல்ல பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் இவர் எந்த ஒரு கட்டத்திலும் தன்னுடைய நண்பர்களை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார். அவருடைய நண்பனும் திறமை மிகுந்த போர்க்கலை வல்லுனருமான சாசுகெ உச்சிட்டா என்ற மாணவன் ஒரு கொடிய மந்திரவாதியின் ரகசிய குழுவால் கடத்தப்படும்போது நருடோ உயிரை கொடுத்து போராடுகிறான். இவனுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் என்னென்ன என்பதுதான் இந்த சீரிஸ்ஸின் கதை. முதலில் பாராட்ட வேண்டியது கதை மற்றும் திரைக்கதைதான். நிஜமாகவே நருடோ வாழ்க்கையில் நம்மால் பயணிக்க முடிகிறது. இந்த மொத்த கதையும் நருடோ உசுமாக்கி என்ற தனிப்பட்ட பையனின் வாழ்க்கை என்பதால் இந்த சீரிஸ் பார்க்கவேண்டிய இன்ஸ்பிரேஷன் ஆன கதைக்களம் ஆகிய உள்ளது. ஃபைட் ஸீன்கள் பிரமாதம், இந்த நொடியில் நான் ட்ராகன்பால் மற்றும் ஒன் பீஸ் அனிமேஷன் தொடர்களை பார்த்தது இல்லை. ஆனால் நான் பார்த்த வரைக்கும் இந்த அனிமேஷன் தொடர் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூட கண்டிப்பாக பிடிக்கும். மொத்தமாக இந்த 220 எபிசோட்களை கொண்ட இந்த தொடர் பின்னால் நருடோ : ஷிப்புடன் என்ற தொடருடன் கன்டினியூ ஆகிறது. இந்த தொடரின் பாதி கதை அடுத்த மீதி கதையாக இந்த புதிய நருடோ : ஷிப்புடன் தொடருடன் 500 எபிசோட் வரையில் தொடர்கிறது, மொத்தத்தில் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு தரமான கதைதான் இந்த நருடோ மற்றும் நருடோ : ஷிப்புடன் அனிமேஷன் தொடர்கள். மிஸ் பண்ணாமல் பாருங்கள். இந்த மாதிரி நிறைய தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை வெளிவந்த நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைத்தளம் NICE TAMIL BLOG - ஐ கண்டிப்பாக சந்தா பொத்தான் மற்றும் ஃபாலோ பொத்தான்களை அழுத்தி சப்ஸ்க்ரைப் பண்ணிக்கொள்ளவும். இந்த வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும், இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும். வலைப்பூவின் கமிட்டி சார்பாக வாழ்த்துக்கள். நம்ம வலைப்பூவை விஸிட் பண்ணிவிட்டு சந்தா பொத்தானாக விளம்பரங்களை கிளிக் செய்யாமல் போவது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. உடனடியாக போஸ்ட்களின் ஒரு பக்க மூலையில் எங்கேயாவது இருக்கும் விளம்பரங்களை கவனமாக கிளிக் பண்ணவும் !!!
No comments:
Post a Comment