Sunday, August 13, 2023

CINEMATIC WORLD - 098 - YOUR NAME - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 

 

இந்த படத்துடைய கதை எனக்கு மிகவும் பிடித்தமான  கதை . நடப்பு டைம்லைலின் கதாநாயகன் சிட்டியில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஒரு ஸ்டூடண்ட்டாக இருக்கிறான். மேலும் பார்ட் டைம்மில் வேலை பார்ப்பதால் அவனுக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால் அடுத்த நாள் கிராமப்பகுதியில் படிக்கும் பள்ளிக்கூட பெண்ணின் வாழ்க்கையில் இருக்கிறான். அதே சமயம் அந்த பெண்ணும் உயிர்கள் இடம் மாறியதால் பையனுடைய வாழ்க்கையில் இருக்கிறான். இந்த வாழ்க்கையே மாற்றிக்கொள்ளும் மாயாஜாலம் இவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதால் இவர்களால் எதுவுமே பண்ண முடிவதில்லை. ஒரு கட்டத்தில் இந்த பையனும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக சந்தித்துக்கொள்ளாமல் இருந்தாலும் ஒரு நல்ல நண்பர்களாக மாறிவிடுகின்றனர். இப்போதுதான் பெரிய டுவிஸ்ட். சமீப காலமாக அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவல்களும் இல்லை. அவளுடைய நினைவுகள், அனுப்பிய மெசேஜ்கள் , எழுதிய எழுத்துக்கள் என்று எல்லாமே மாயமாக மறைகிறது. இப்போது பையன் அந்த பெண்ணை பற்றி தகவல் சேகரிக்க கிளம்பும்போது அவனுக்கு அதிர்ச்சியான ஒரு விஷயம் தெரியவருகிறது. அந்த பெண் நடப்பு வருடத்தில் இருந்து 3 வருடங்கள் முந்தைய வருடத்தில் வாழ்ந்து இருக்கிறாள். ஒரு வால் நட்சத்திரம் கிராமத்தின் மீது விழுந்த விபத்தில் இறந்துபோயிருக்கிறாள். இப்போது பையன் எப்படியாவது அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும். அடுத்து என்ன செய்தான் என்பதுதான் இந்த படத்தின் கதை. வண்ணமயமான அனிமேஷன் இந்த படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். இந்த படம் ரிலீஸ் ஆன மாதங்களில் உலக அளவில் மிகவும் பெரிய வசூல் சாதனையே செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஜப்பானிய அனிமேஷன் படங்களை ஆங்கில மொழியில் பார்ப்பதே நான் ரெகமண்ட் செய்வேன். சப்டைட்டில் தேவையே இல்லை. இந்த படத்தின் ஒரு ஒரு கட்சியும் அனிமேஷன் பக்காவாக பண்ணப்பட்ட காட்சிகள் என்பதை பார்க்கும்போதே தெரிந்துகொள்ளலாம். பையனின் வாழ்க்கைக்கும் பெண்ணின் வாழ்க்கைக்கும் இருக்கும் டைம்லைன் பிரிவு இந்த படத்தில் அவ்வளவு அழகாக காட்டப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த படங்களான WEATHERING WITH YOU மற்றும் SHUZUME படங்களிலும் இதே போன்ற காட்சிகளை கதைக்களத்தில் கொடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி படங்கள் நம்ம TAMIL CINEMA ல எப்பதான் வரும் ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...