Sunday, August 20, 2023

CINEMA TALKS - LOVE TODAY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் எனக்கு பிடித்த ஒரு தமிழ் திரைப்படம் லவ் டுடே. இந்த படத்தை பார்க்கும்போதே ரொம்பவுமே அருமையாக இருந்தது. எவ்வளவு சிறப்பான திரைக்கதை. ஒரு காதல் கதையில் ஒருவருடைய ப்ரைவசி இன்னொருவருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த படம் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். இந்த படத்துடைய கதை பிரதீப் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர். இவர் நிகிதாவை காதலிக்கிறார். நிகிதாவுக்கு அந்த ஒன் பிளஸ் போனை வாங்கி கொடுத்ததும் பிரதீப்தான். ஒரு கட்டத்தில் இவருடைய காதலில் ஒன்று சேர பெண்வீட்டில் சென்று பெண்ணின் அப்பாவை சந்திக்கும்போது அவர் கொடுக்கும் ஒரு சோதனை என்னவென்றால் ஒரு வாரம் இவர்கள் இருவரும் ஃபோனை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவரை பற்றி இன்னொருவர் மொத்தமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இந்த சோதனையை செய்யும்பொது நிகிதாவை பற்றி அதிகமாக தெரிந்துகொள்ளும் பிரதீப் அவளுக்கு ஃபோன் செய்து கண்டிக்கிறார். இப்போதுதான் ஒரு செம்ம டுவிஸ்ட். இவ்வளவு நாளாக பிரதீப் ஃபோன்னில் பேக் அப் பண்ணியிருந்த அனைத்து விஷயங்களையும் நிகிதா மறுபதிப்பு செய்து பதிவிறக்கம் பண்ணவே பிரதீப் வாழ்க்கை தாறுமாறாக மாறுகிறது. 

இந்த படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் இன்டர்நெட் ப்ரைவசி என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை இந்த படம் ஒரு டிஸென்ட்டான ரொமான்டிக் காமெடி பாயிண்ட் ஆஃப் வியூவில் சொல்லியிருப்பதுதான். மொத்த படத்தின் குழுவினரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.  ப்ரொடக்ஷன் டிசைன் மிகவும் அருமை. யுவன் சங்கர் ராஜாவின் பெர்பெக்ட் பேக்ரவுண்ட் ஸ்கோர் பாடல்களை விட ஒரு படி மேலாக செல்கிறது. சொல்லுங்க மாமாகுட்டி பாடல் வேறு ரகம்.  ஒரு ஒரு ஸீன்களும் சிம்பிள் ஆனதாக இருந்தாலும் கண்ணுக்குள் நிற்கும் அளவுக்கு நடிப்பு மற்றும் தயாரிப்பு  வேல்யூ இருக்கிறது. இன்றைக்கு கூட லவ் டுடே படத்தின ஓபன் கிரெடிட்ஸ் மற்றும் பிரேமம் படத்தின் எண்ட் கிரெடிட்ஸ் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள். நல்ல கிரியேடிவிட்டி. சிறப்பான கதைக்களம் , மிக தெளிவான காட்சியமைப்பு என்று சொல்லப்போனால் எல்லா விஷயங்களிலும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஒரு படம் இந்த லவ் டுடே. உங்களுடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய தமிழ் திரைப்படம். மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...