புதன், 23 ஆகஸ்ட், 2023

இன்னைக்கு தேதிக்கு குறைந்தபட்ச பட்ஜெட் ஃபோன் - MOTO E40 - TAMIL

இன்றைய தேதிக்கு (20-ஆகஸ்ட்-2023 ல் இந்த கன்டன்ட் எழுதுகிறேன் ) - நெட்ல ஃபோன்களை பார்க்கும்போது இந்த ஃபோன் கண்ணுக்கு பட்டது, ஸ்னாப் ட்ராகன் , மீடியா டேக் வகையறாக்களை விடுங்கள் , நம்ம தலை யூனிசாக் T-700 கு பெரிய விசில் அடித்துவிட்டு வாருங்கள். போட்டோ , வீடியோ , கேமிங் என்று எதற்க்கும் இந்த 2020 இல் வெளிவந்த இன் டாப் பிராசசர் காம்பெட்டேபிள் ஆகாது. பின்ன எதுக்கு இந்த ஃபோன் என்றால் உங்கள் பாக்கெட் பட்ஜெட்டுக்குள் அடங்கும், மேலும் கிளீன் ஆனா ஆன்ட்ராய்ட் ஓ எஸ் கொடுத்துள்ளார்கள். மீடியா , படம் , ஆடியோவுக்கு நன்றாக இருக்கும் - கொரில்லா கிளாஸ் இல்லை. ஒரு தரமான கிளாஸ் மற்றும் நல்ல கேஸ் உங்களுக்கு கிடைத்தால் ஃபோன் பயன்பாடு அவசியமற்ற பெரியவர்களுக்கு இந்த ஃபோன் ஒரு நல்ல பர்சேஸ் சாய்ஸ். இதுவே 8000 - 9000 என்ற இந்த ப்ரைஸ் ஸேக்மெண்ட்டில் இந்த ஃபோன் விட நல்ல ஃபோன் நல்ல பேட்டரி பேக் அப் இல்லை. இரண்டு வருடம் முன்னால் வந்த டெக்னோலஜியாக இருப்பதால் ஸ்டாக் ஆன்ட்ராய்ட் எக்ஸ்பீரியன்ஸ் ஒரு மாதிரி லேகசியான பீல் கொடுக்கும். உண்மையில் இது G40 என்ற டேப்லெட்க்கு பயன்படுத்தின பிராசசர், இப்போது ஃபோன்க்கு எனும்போது இப்படித்தான் இருக்கும். மற்றபடி உங்களிடம் இன்னும் 3000 சேர்க்க வேண்டும் என்ற யோசனை இருக்கிறது என்றால் இதனை விட நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கும் ஃபோன்கள் பக்கம் சென்றுவிடுங்கள். இந்த ஃபோன் 2017 களின் ஜெனெரேஷன் காலத்தின் மைக்ரோமாக்ஸ் வகையறாக்களின் சிறப்பான மலரும் நினைவுகளை கொடுத்துவிடும். டெக் பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த விமர்சனம் புரியும் , மற்றபடி ஜெனெரல் ஆடியன்ஸ்க்கு புரியாது !! நான் சொல்வது சரிதானே !!!

கருத்துகள் இல்லை:

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #18

  இந்த காலத்து அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள், பிரிந்து இருக்கும் சின்ன சின்ன கூட்டங்களை ஆட்சி செய்து அதிகாரத்தில் கொண...