இந்த படம் எனக்கு பெர்சனல்லாக மிகவும் பிடித்த படம் என்றே சொல்லலாம். இந்த படத்துடைய கதை ஜார்ஜ் வாழ்க்கையில் நடக்கும் மூன்று தனித்தனி காதல் கதைகள். முதல் கதை பள்ளிக்கூடம் படிக்கும்போது கடைசி பள்ளிக்கூட ஆண்டில் காதலிக்கும் மேரி. இந்த காதலில் டுவிஸ்ட் என்னவென்றால் மேரி காதலிக்கும் பையனின் பெயர் ஜார்ஜ். இந்த காரணத்தால் இவர்களின் காதலை சேர்த்து வைக்க கதாநாயகன் ஜார்ஜிடமே ஹெல்ப் கேட்கிறார் மேரி. முதல் காதல் இவ்வளவு மோசமாக முடிந்துவிடவே அடுத்ததாக இரண்டாவது காதல். இப்போது ஜார்ஜ் காலேஜ் படிக்கும்போது பார்த்த முதல் நொடியிலேயே என்னமோ இனம் புரியாத அன்புடன் ஒரு மனதுக்குள் ஒரு நொறுங்கலை உருவாக்குகிறார் கல்லூரிக்கு புதிதாக வரும் சிறப்பு ஆசிரியை மலர். கொஞ்சம் கொஞ்சமாக இந்த இருவரின் காதல் டேவலப்மெண்ட் ஆகிறது. ஆனால் ஒரு விபத்தின் காரணமாக மலர் இப்போது ஜார்ஜ்ஜை காதலித்த ஆண்டுகளில் நடந்த அனைத்து நினைவுகளையும் மறந்துவிடுகிறார். இதன் பின்னால் பல வருடங்களுக்கு யாரயும் காதலிக்காமல் தனியாகவே வாழும் ஜார்ஜ் கடைசியாக காதலிப்பது ஸேலைன். இந்த காதல் கடைசியில் வெற்றி அடையுமா என்பதே இந்த படத்தின் கதை. கதை மிக சிம்பிள் ஆன ஒரு கம்மீங் ஆஃப் ஏஜ் ரொமான்டிக் டிராமாவாக இருந்தாலும் கிளைமாக்ஸ் வரைக்கும் ஒரு எக்செப்ட்ஷனல் பிரசன்டேஷன் இந்த படத்தில் இருக்கிறது. பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டு இருக்கும் ஒரு தோட்டம் முதல் செப்டெம்பர் மழையில் நனைந்துகொண்டு இருக்கும் கூரை ஒடுகள் வரை சினிமாடோகிராபி இந்த படத்துக்கு தனித்து இருக்கும் ஒரு அருமையான பிளஸ் பாயிண்ட் கொடுத்துள்ளது. மறுபடியும் மறுபடியும் திரும்ப திரும்ப ரசித்து பார்க்க வைக்கும் காமிரா வொர்க். ஒரு ஸ்லைஸ் ஆஃப் லைப் படமாக இருந்தாலும் மாஸ் காட்டும் காட்சிகள் என்று படம் மிக மிக சிறப்பான விஷயங்களை கொண்டிருப்பதால் செம்ம பிளாக்பஸ்டர் ஆக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பிரேமம் ஒரு ரசிக்கும்படியான காதல் கதை தொகுப்பு.
No comments:
Post a Comment