Sunday, August 13, 2023

CINEMATIC WORLD - 097 - ALIENOID - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 

\

பூமியை பாதுகாக்க கடந்த காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மனிதர்களுக்குள் வேற்றுகிரக வாசிகளின் குற்றவாளிகளை சிறைபிடிக்கிறது ஒரு வேற்றுகிரக பாதுகாப்பு அமைப்பு. நிறைய வருடங்களாக இந்த அமைப்புக்கு வேலை செய்யும் மனித ரோபோட்கள்தான் கார்ட் மற்றும் தண்டர் . இந்த இருவரில் தண்டர் அதிகமாக மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் கடந்த காலத்துக்கு சென்று ஒரு வேலையை முடிக்கும்போது அனாதையாக போன ஒரு பெண் குழந்தையை நடப்பு வருடத்தில் கொண்டுவந்து வளர்க்க முயற்சிக்கிறார். இப்போது 2012 ல் பள்ளிக்கூடம் போகும் அந்த குழந்தை இந்த இயந்திர பாதுகாப்பு அமைப்புகளையும் டைம் டிராவல் காரணமாக நடப்பு பூமியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்று  தெரிந்துகொள்ளும் நேரத்தில் ஒரு விபத்தால் வேற்றுகிரக குற்றவாளி ஒன்று அடைபட்ட மனித உடலில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு விண்வெளி கப்பல்களை களத்தில் இறக்கி மனிதர்களுடன் சண்டைபோட்டு இந்த உலகத்தினை கிட்டத்தட்ட அழித்துவிடுகிறது. ரோபோட்களின் கடைசி கட்ட சக்தியால் கடந்த காலமான  1380 க்கு செல்லும் அந்த பெண் குழந்தை அங்கேயே வளர்கிறது. இப்போது வளர்ந்த பெண்மணியாக ஒரு மாயாஜால சண்டைக்கலைகள் தெரிந்த இளைஞரின் உதவியுடன் வேற்றுகிரக வாசிகளின் இந்த செயல்களை தடுக்க முயற்சிக்கும் இந்த பெண் செய்யும் செயல்கள் என்ன ? என்பதே படத்துடைய கதை. நான் பார்த்த சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் நிறைய நாட்களுக்கு பிறகு மனதை கவர்ந்த ஒரு படம் இது என்று சொல்லலாம். பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை பண்ணவில்லை என்றாலும் அடுத்த பாகத்தின் ரிலீஸ்க்காக கண்டிப்பாக காத்திருக்கலாம். காரணம் என்னவென்றால் முதல் பாகம் அவ்வளவு விறுவிறுப்பாக உள்ளது. காட்சிகள் துரிதமாகவும் தேவைப்படும் அளவுக்கும் உள்ளது. சயின்ஸ் மற்றும் மேஜிக்கல் ஃபேண்டஸியின் பக்காவாக கலந்து இந்த படத்தின் மொத்த பிரசன்டேஷன் இருப்பதால் ஈஸியாக இந்த படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ரசிகர்களின் விருப்பமான படமாக மாறியுள்ளது. ரோபோட் கார்ட் , கத்திச்சண்டை வீரர் மியூரக் மற்றும் காலத்தை கடந்த பெண்மணி லி ஆன் என்று அனைவரின் கதாப்பத்திரமும் சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு உள்ளது. ப்ரொடக்ஷன் காஸ்ட் அதிகமாக இருந்தாலும் எதிர்பார்த்த அந்த ப்ரீமியம் காட்சிகள் படத்தில் இருக்கின்றது, மேலும் லொகேஷன் செலேக்ஷன் , காஸ்ட்யூம்ஸ் , வசனங்கள் , மியூசிக் என்று எதிலும் கொஞ்சமும் குறைவைக்காத ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். கடைசியில் நம்ம ஊரு பொன்னியின் செல்வன் - 1 படம் போல கிளைமாக்ஸ்ல கன்டினியூவிட்டி கொடுத்து ALIENOID - PART TWO ன்னு முடிச்ச விதம் இருக்கே ! கெத்து !! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...