இந்த படம் எனக்கு பெர்சனல்லாக பிடித்த ஒரு ஃபேமிலி படம், சிவகார்த்திகேயன் , ஐஷ்வர்யா ராஜேஷ் , அணு இம்மானுவேல் , நடராஜ் . சூரி என்று பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். பசங்க , கடைக்குட்டி சிங்கம் , கேடி பில்லா கில்லாடி ரங்கா , கதகளி போன்ற நல்ல படங்களை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ் இந்த படம் ஒரு கோல்டன் கிரீடம் என்றே சொல்லலாம்.
சிவகார்த்தியேன் செம்ம ஸ்டைல். ஒரு கிராமத்து குடும்பத்தில் வளர்ந்து தங்கே மேலே அதிகமாக பாசம் வைத்துள்ள ஒரு இயல்பான அண்ணனாக சிவகார்த்திகேயன் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ், அணு இம்மானுவேல் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக நடிப்பை கொடுத்துள்ளார். டி இம்மான் பின்னணி இசையில் பாடல்கள் ஒரு கிராமத்து ஃபேமிலி ஸ்டோரிக்கு ஒரு நல்ல பிளஸ் பாயிண்ட்.
இந்த படத்துடைய கதை. குடும்பத்தில் இருக்கும் வெறுப்பு காரணமாக சிவகார்த்திகேயனுக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் தங்கை மேலே நிறைய அன்பு வைத்துள்ளார், இப்போதுதான் நடராஜ் ஒரு அன்பான மனிதராக காட்டிக்கொண்டு பின்னால் வெறுப்பை காட்டுகிறார். இந்த பிரச்சனைகளை அண்ணனும் தங்கையும் எப்படி சமாளித்தார்கள் என்பதே இந்த படத்தின் கதைச்சுருக்கம்.
நிறைய எமோஷன்கள் கலந்த ஒரு குடுபத்தோடு பார்க்க முடிந்த திரைப்படமான இந்த படம் வாரத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ஈவினிங் சன் டிவியில் ஒளிபரப்பு பண்ணக்கூடிய ஒரு ஃபார்மட். ஜிகிரி தோஸ்த் , மயிலாஞ்சி , எங்க அண்ணன் , உன் கூடவே போறக்கணும் பாடல்கள் மனதை கவரும் கிளாசிக் ஹிட்ஸ் என்றே சொல்லலாம். போன படமான கடைக்குட்டி சிங்கம் படத்தை போலவே ஃபேமிலியில் பிரிவுகள் வந்தால் என்னென்ன நடக்கும். மேலும் கதாநாயகர் எப்படி அதனை சமாளிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருப்பதால் ஒரு நல்ல படமாக இருக்கிறது. இப்போதைய படங்கள் அதிகப்படியான ரொமான்ஸ் , அதிகப்படியான க்ரைம் , அதிகப்படியான கொலைகள் , போன்ற விஷயங்களையே கதையை நகர்த்திக்கொண்டுபோகும் விஷயங்களாக இருப்பதால் இந்த படம் ஒரு நல்ல ரிலீஃப் ஆன திரைப்படமாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு நல்ல ஃபேமிலி டிராமா கதைக்களம் இந்த நம்ம வீட்டு பிள்ளை. இன்னும் ஒரு விஷயம் சொல்லப்போனால் "குடும்பம்னா பிரச்சனைகள் இருக்கும்தான் ஆனால் நமக்குன்னு இருக்கறது ஒரே குடும்பம்தான்" என்ற வாரிசு படத்தின் வசனம் இந்த படத்துக்கு கொடுத்து இருந்திருக்கலாம். வாரிசு படத்தின் குடும்ப காட்சிகள் எல்லாம் என்னமோ தலைவலி தைலத்துக்காக விஜய் டிவியில் போடும் விளம்பரம் போலத்தான் இருந்தது. மொத்தத்தில் இந்த படம் ஒரு எளிமையான ரசிக்கும்படியான ஃபேமிலி மூவி, இயக்குனர் முத்தையா இது போன்ற படங்களை பார்த்து அதிகம் வயலன்ஸ் இல்லாத படங்களை எடுக்கவேண்டும் என்று நேயர் விருப்பம்.
No comments:
Post a Comment