ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை என்பதை சொல்லும் ஒரு சிம்பிள் ஆன காமெடி பிலிம்தான் இந்த படம். அலெக்ஸ் ஹிட்சன்ஸ் அவர் வாழும் பகுதியில் டேட் டாக்டர் என்ற அடையாளத்தை எடுத்துக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல காதலர்களுக்கு மட்டும் அட்வைஸ் கொடுத்து காதலிக்கும் பெண்ணுடன் சேர்த்து வைக்கிறார். கடைசியாக இந்த கன்ஸல்டண்ட் வேலையில் ஆல்பர்ட் என்ற இனவெஸ்ட்மெண்ட் துறையில் வேலை பார்க்கும் சாதாரண மனிதரை அவர் உண்மையாக காதலிக்கும் அலேக்ரா என்ற பணக்கார சினிமா செலிப்ரிட்டி பெண்மணியிடம் சேர்த்து வைக்கும் வேலையில் இருக்கிறார். இந்த வகையில் தன்னுடைய தோழி ஏமாற்றப்பட்டதுக்கு அலெக்ஸ்தான் காரணம் என்று தவறாக புரிந்துகொள்ளும் பத்திரிக்கை எடிட்டர் பெண்மணி இவரை கேட்டவர் என சித்தரித்து நியூஸ் பேப்பரில் வெளியிட அலேக்ரா - அலெக்ஸ் வாழ்க்கையில் நடந்த திருப்பம் என்ன ? அலெக்ஸ் எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை. HITCH படம் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒருவரே காதலில் விழுந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு புது கான்செப்ட்டில் இருப்பதால் இந்த படம் கிளைமாக்ஸ் வரைக்கும் பார்க்கவே நல்ல இண்டரெஸ்ட்டிங்காக இருக்கும்.
இந்த படத்தில் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லப்பட்டாலும் ப்ரொடக்ஷன் ஒரு சிம்பிள் ஆனா லைட் பட்ஜெட் ரொமான்டிக் காமெடி படம் போலத்தான் இருக்கிறது. மென் இன் பிளாக் போன்ற படங்களில் இருக்கும் அதே சார்ம் இந்த படத்திலும் வில் ஸ்மித்க்கு கைகொடுக்கிறது. ஐ ரோபோட் மற்றும் ஜெமினி மேன் போன்ற படங்களில் சீரியஸ் ஆன வில் ஸ்மித்தை பார்க்கும் நமக்கு அவருடைய நகைச்சுவையான டிராமா படங்களில் ஒரு நல்ல ரிலீஃப் கிடைக்கிறது. கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. ஒரு நல்ல என்டர்டைன்மெண்ட்.
No comments:
Post a Comment