AGENT கண்ணாயிரம் - இந்த படத்தை பொறுத்தவரைக்கும் சந்தானம் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்று மட்டுமே எதிர்பார்க்க வேண்டாம். இந்த படம் ஒரு அருமையான க்ரைம் மிஸ்ட்ரி படம். இந்த படத்தில் சந்தானம் ஒரு பிரைவேட் டிடெக்டிவ்வாக இருக்கிறார். போதுமான வருமானம் இல்லை என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால் சொந்த முயற்சிகளையும் கொடுத்து நடந்த குற்றங்களின் தகவல்களை சேகரித்து உதவி பண்ணுகிறார். இங்கேதான் அந்த ஊருக்கு ஆவணப்பட பத்திரிக்கையாளராக வேலை விஷயமாக வந்திருக்குக்கும் ரியா அந்த வட்டார பகுதிகளில் சமீபத்தில் கிடைக்கும் குழப்பமான பெயர் கூட தெரியாதவர்களின் ஆதரவற்ற சடலங்களின் நிஜமான பின்னணி குறித்த விசாரணையில் இருப்பதால் சந்தானத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்.
உள்ளூர் காவல் துறையில் சப்போர்ட் இல்லை என்றாலும் சம்மந்தப்பட்டவர்களை சந்தானம் விசாரணை பண்ணிக்கொண்டு இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று முகம் தெரியாதவர்களால் சந்தானத்தின் உயிருக்கே ஆபத்து வருகிறது, இந்த பிரச்சனைகளின் பின்னணியில் இருக்கும் ஒரு பெரிய க்ரைம் நெட்வொர்க்கையே எதிர்க்கும் சந்தானம் கடைசியாக வென்றாரா ? என்பதில் இந்த கதை நகர்கிறது.
பொதுவாக க்ரைம் மிஸ்டரி படங்களில் நிறைய ஆக்ஷன் அட்வென்சர் கலந்த ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற படங்களையும் சொல்லலாம், இல்லையென்றால் விசாரணை பண்ணுவதில் கதை நகர்ந்துகொண்டு இருக்கும் படமான செவன் படத்தை போலவும் சொல்லலாம் , இல்லையென்றால் கடைசி வரைக்கும் ஒரு பெரிய டுவிஸ்ட்க்காக காத்திருக்க வைக்கும் டெத் ஆன் தி நைல் படம் போலவும் சொல்லலாம், இந்த படம் நான் பெர்சனல்லாக பார்த்த எந்த படம் போலவும் இல்லை. ஒரு பிளாட் ஆன விசாரணை பின்னணியாக இந்த படம் 2000 களின் க்ரைம் நாவல் படிக்கும் அனுபவத்தை கொடுக்கிறது, நரேந்திரன் ஈகிள் ஐ டிடெக்டிவ் ஏஜென்ஸியும் கணேஷ் வசந்தையும் கொஞ்சம் பரத்தையும் சுசீலாவையும் மிக்ஸ் பண்ணி இந்த படம் கொடுக்க முயற்சி பண்ணியுள்ளது. இது ஒரு பெர்பெக்ட்டான க்ரைம் படம். இதே போல டிஃபரெண்ட் ஆன இன்னொரு படம்தான் கொலை. இந்த படம் பற்றி இன்னொரு போஸ்ட் பார்க்கலாம்.
இப்போது ஏஜெண்டு கண்ணாயிரம் பற்றி பேசலாம். படத்தில் இருக்கும் பெஸ்ட் ஆன விஷயம் சினிமாடோகிராபி. இங்கே பிரமாதமான லொகேஷன் பாயிண்ட்கள் இல்லை என்றாலும் ஒரு ஒரு காட்சியும் காமிராவில் விழும்போது செம்ம நேர்த்தியாக விழுந்துள்ளது, படத்தின் இந்த காமிராவொர்க்குக்கு மட்டும் 9/10 என்ற பாயிண்ட்ஸ் கொடுத்துவிடாலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஃபைட் ஸீன் நடக்கும்போது மார்னிங் சன்லைட் ஃபிரேம்களை மிக சிறப்பாக படம்பிடிக்கப்பட்டுள்ள விதம் அருமை. படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததுதான். இடையில் ஒரு காதல் கதையோ காமெடி ஓவர்லோடோ இல்லை. கமர்ஷியல்லாக ஃபைட்டர்ஸ்ஸை பறக்க விடும் மாஸ் படங்களுக்கு மட்டுமே ஆடியன்ஸ் சப்போர்ட் பண்ணாமல் இந்த படங்களுக்கும் சப்போர்ட் பண்ணலாம். நெகடிவ் என்னவென்றால் நல்ல ஸ்கிரீன் பிரசன்டேஷன் இல்லை. காமிரா வொர்க் சிறப்பாக இருக்கிறது ஆனால் ஸ்கிரீன்னில் எப்படி ப்ரெசெண்ட் பண்ண வேண்டும் என்பதில் பாரம்பரியமாக இருக்கும் அப்ரோச்சை விட்டுவிட்டு புதிதாக கொண்டுவந்திருக்கும் இந்த அப்ரோச் நிறைய நேரங்களில் படத்தில் சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை. அவ்வளவுதான் இந்த படத்துக்கு நம்ம விமர்சனம்.
No comments:
Post a Comment